புதன், 6 பிப்ரவரி, 2019

இராதாபுரம் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வென்னி உடையார் சாஸ்தா

ஸ்ரீ புலிமாடசாமி துணை

இராதாபுரம் ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்

சிங்கம்பட்டி ஸ்ரீ சிவனணைந்த பெருமாள் தேவரின் ஐந்து புதல்வர்களில் முதல் இருவர் சந்ததிகள் இராதாபுரத்திலும் மூவர் சந்ததிகள் கீழ்ப்புலியூர் ,கருங்காடு, கோபாலசமுத்திரம் ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள்...

மூத்தவர் ஸ்ரீ பெரியணைந்த பெருமாள் தேவர் குடும்பத்திற்கு பிரம்மராட்சகை அம்மனும்

நடுவர் குடும்பத்திற்கு முன்னடி, முருகன் இருளமாடன் ,சிவனணைந்த பெருமாள் போன்ற தெய்வங்களும்

இளையவர் குடும்பத்திற்கு புலிமாடன், வில்லுமாடன் ,விடுமாடன், தவசி தம்புரான் சுடலைமாடன், போன்ற தெய்வங்களும் தனி பூசை செய்துக்கொள்ளும் உரிமை சேர்ந்தது....

மாடசாமி ,பேச்சியம்மாள் ,முப்பிடாதி போன்ற தெய்வங்களை பொதுவான முறையில் வணங்கினார்கள்....

இதில் மாடசாமி களக்காடு படலையார் குளத்திலும் பிரம்மராட்சகை அம்மன் போன்ற தெய்வங்கள் சிங்கம்பட்டியில் இருந்தும் பிடிமண் எடுத்து பூடங்கள் அமைக்கப்பட்டது....

இராதாபுரம் கல்யாணி அம்மன் கோவிலுக்கு கொடிமரம் வெட்டச்சென்றதற்காக கொடைவிழா நடக்கும் பொழுது இரண்டுகோட்டை நெல்லும் பூஜை பொருட்களும் மானியமாக வழங்கப்படுகிறது.....

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தெற்கு கருங்குளம் கோவிந்த லெட்சுமி அம்மன் மாடசுவாமி திருக்கோவில்

ஸ்ரீ மாடசாமி துணை

தெற்கு கருங்குளம் கோவிந்த லெட்சுமி அம்மன் மாடசுவாமி திருக்கோவில்

சிங்கம்பட்டி ஜமீன் வகையறாக்கள்

பாகம்:-1

சுமார் 400-வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு மதுரை ஜில்லா திண்டுக்கல் தாலுக்கா சத்திரப்பட்டி என்ற ஊரில் #கொத்துத்தாலி மறவர் இனத்தை சேர்ந்த ஸ்ரீமான் சிவசுப்புத்தேவர் என்பவர் வாழ்ந்துவந்தார்....

இவருடைய மனைவி பெயர் மீனாட்சி அம்மாள் இவர்களுக்கு நான்கு புத்திரர்கள்..

சங்கரலிங்கத்தேவர்

மாடப்பத்தேவர்

வன்னியபெருமாள்த்தேவர்

சின்ன மாடப்பத்தேவர் இவர்களுடைய

குடும்ப குலதெய்வங்கள்

அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன்

ஸ்ரீ தாமரையுடையார் சாஸ்தா

ஸ்ரீ மாடசாமி

இவர்கள் நான்குபேரும் வளர்ந்துவரும் காலத்தில் தங்களுடைய குலத்தெய்வங்களையும் பழனியில் உள்ள ஸ்ரீ முருகப்பெருமானையும் தரிசித்து வாழ்ந்து வந்தார்கள்...

ஒரு நாள் ஸ்ரீ முருக பெருமானை தரிசித்து விட்டு வரும் வழியில் தொண்டைமான் நகரத்தை ஆட்சி செய்துவரும் ஸ்ரீமான் புதுக்கோட்டை மன்னர் ஸ்ரீ பாஸ்கர தொண்டைமானும் முருக பெருமானை தரிசிக்க வந்தார்..

தேவர் மக்கள் நால்வரையும் கண்டார்... இவர்களது உடல் பலம் வீர தீரத்தை கண்டு தனது அரண்மனைக்கு போர்ப்படை தளபதிகளாக இருக்க அழைத்தார்...

(கதை தொடர்ச்சி பாகம்: 2)

பாகம் :2

பாகம் :2

தேவர் மக்கள் நான்கு பேரும் சரி என்று சம்மதம் சொல்லி தனது அப்பா அம்மாவிடம் அனுமதி பெற்று தங்கள் குலதெய்வங்கள் உடன் அழைத்து சென்றார்கள்....

ஸ்ரீ துர்க்கை அம்மனை ஒரு வெண்கலப்பெட்டியிலும் ஸ்ரீ தாமரை உடையார் சாஸ்தா ஸ்ரீ மாடசாமி உடன் புதுக்கோட்டைக்கு கூட்டி சென்றார்கள்..

தொண்டைமான் அரசவையில் போர்ப்படை முதன்மை தளபதிகளாக செய்து கொண்டு தங்கள் குலதெய்வங்களுக்கு பூஜை செய்து வாழ்ந்து வந்தார்கள்..

சில நாட்கள் சென்ற பின்பு கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசிக்கும் ஆவல் அவர்களுக்கு வந்தது அதன்படி தொண்டைமான் மன்னனிடம் உத்தரவு கேட்டார்கள்...

மன்னனும் சம்மதம் சொல்லி சீக்கிரம் சென்று வாருங்கள் என்று உத்தரவு கொடுத்தார்...

தேவர் மக்கள் நான்கு பேரும் தங்கள் குலதெய்வங்களை அழைத்து கொண்டு கன்னியாகுமரி கிளம்பினார்கள் வரும் வழியில் தங்குகின்ற இடமெல்லாம் தெய்வங்களை தரிசித்து வருகிறார்கள்...

பழனி முருகனை தரிசித்து விட்டு மதுரை வழியாக ஸ்ரீ சொக்கநாதர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார்கள்...

அடுத்து திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்தார்கள் அடுத்து விருதுநகர் வந்து சிவன்கோவிலில் தரிசனம் செய்தார்கள் ....

அடுத்து சாத்தூர் வழியாக இருக்கண்குடி சென்று ஸ்ரீமாரியம்மனை வணங்கினார்கள் அடுத்து கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவள்ளி அம்மனை தரிசித்தார்கள்....

அடுத்து கயத்தார் ஸ்ரீ அகிலாண்ட அம்மனையும் மற்றும் ஸ்ரீ பெருமாள் கோவிலும் தரிசனம் செய்தார்கள்....

அடுத்து ஸ்ரீ செங்கலமுடையார் சாஸ்தாவை வணங்கி புதுக்குடி வந்து மேற்கு திசை நோக்கி திரும்பினார்கள்....

வரும் வழியில் ஸ்ரீ விட்லமுடையார் சாஸ்தாவை வணங்கி வழிப்பாட்டுக்கு செழியநல்லூர் வந்தடைந்தார்கள்....

வடக்கு செழியநல்லூர் அருகே ஒரு மைதானத்தில் தங்கினார்கள் சூரியன் மறைந்ததால் அம்மனை அங்கு வைத்து பூஜை நடத்த சித்ரா நதியில் குளிக்க வருகிறார்கள் .....

அதே நேரத்தில் செழியநல்லூர் நகரை ஆட்சி செய்து வரும் உக்கிர பாண்டியன் மன்னன் தேவர் மக்களை கண்டு அவர்களை பற்றி விசாரித்தார் ...

அவர்கள் நான்குபேரும் தங்களுடைய ஊர் மற்றும் வரலாறுகளை சொல்கிறார்கள் தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மனை வழிபட போவதாக கூறுகிறார்கள்.

செல்லும் வழியில் பொழுது சாய்ந்ததால் வடக்கு செழியநல்லூரில் குளித்து முடித்து விட்டு அம்மனுக்கு பூஜை செய்ய இருக்கிறோம் என்று கூறினார்கள்.

அவர்களை உக்கிரபாண்டிய மன்னன் தன்னுடைய அரண்மணையில் தங்கும்படி வற்புறுத்தினார் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தங்கும் வசதியும் மற்றும் வரலாறு பட்டயமும் செய்து தருவதாக கூறினார்.

மூத்தவர்கள் இருவரும் தங்க சம்மதித்தார்கள் இளையவர்கள் இருவரும் கன்னியாகுமரி செல்வதில் முடிவாக இருந்தார்கள் அப்போது வன்னியபெருமாள்த்தேவரும் சின்ன மாடப்ப தேவரும் அம்மனை தங்களால் தூக்கி செல்லமுடியாது நீங்கள் பூஜை செய்யுங்கள் அவர்கள் சென்றார்கள்..

தற்போது இளையவர்கள் சந்ததியினர் கன்னியாகுமரி அருகில் உள்ள தெற்கு கருங்குளத்தில் வாழ்ந்துவருகிறார்கள்..

மூத்தவர்கள் பெட்டி இருக்கும் இடத்தில்
ஸ்ரீ தாமரை உடையார் சாஸ்தா ஸ்ரீ துர்க்கை அம்மனையும் வைத்து பூஜித்தார்கள் பின்பு ஸ்ரீ மாடசுவாமிக்கு தெற்கு செழிய நல்லூரில் கோவில் அமைக்க ஸ்ரீ ஐவர் ராஜா கோவிலில் உத்தரவு கேட்டார்கள்... செழியநல்லூர் ஊருக்கு மேற்கே கோவில் அமைக்க ஸ்ரீ ஐவர் ராஜா உத்தரவு கொடுக்க #ஸ்ரீசிவக்கொழுந்து (சிவனணைந்த பெருமாள்) ஸ்ரீ மாடசாமி ஸ்ரீ மாடத்தி அம்மன் ஸ்ரீ பேச்சி பிரம்மசக்தி அம்மன்
#ஸ்ரீபலவேசக்காரசுவாமி மற்றும் ஸ்ரீகோழி மாடசாமி போன்ற தெய்வங்களுக்கும் பீடம் அமைத்து கோவில் கட்டி கும்பிட்டு வருகிறார்கள்...

ஒவ்வொரு வருடமும் ஆனி ஆடி மாதத்தில் கொடைவிழா நடக்கும்பொழுது வியாழக்கிழமை சாயங்கால நேரத்தில் சித்ரா நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து கும்பம் ஏற்றி குடி அழைப்பு பூஜை நடத்தி ஸ்ரீ தாமரை உடையார் சாஸ்தாவை வணங்கி வெள்ளிக்கிழமை சூரியன் உதிக்கும் நேரத்தில் பொங்கல் வைத்து செங்கிடாய் பலிகொடுத்து சிவ கொழுந்து சுவாமியை பூஜை செய்து வணங்கி வெள்ளிக்கிழமை மதியவேளையில் பொங்கல் வைத்து ஆட்டுக்கிடாய் பலிகொடுத்து ஸ்ரீ மாடசாமியை பூஜை செய்து வணங்குவார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு வேளையில் புழுங்கல் அரிசியில் படையலிட்டு ஆடு மற்றும் கோழி கறி வைத்து ஆட்டு கிடாய் பலியிட்டு வில்லிசை மற்றும் மேளதாளங்களுடன் பூஜை செய்து வணங்கி வருகிறார்கள் ....

சனி, 2 பிப்ரவரி, 2019

சாஸ்தா ஆலய பரிவார பந்தி தேவதைகள்

சாஸ்தாவின் சட்டமிடும் மந்திரி

சட்டநாதனின் ( சங்கிலிபூதத்தாரின் ) கீழ்

அணிவகுத்து அழகாய் நின்று பரிபாலிக்கும்

சாஸ்தா ஆலய பரிவார பந்தி தேவதைகள் :

1) கணநாதன் ( மஹாகணபதி )

2) நாகராஜக்கள்

3) சிவன் இணைந்த பெருமாள்
( இவரே காலப்போக்கில் மருவி
சிவணனைந்தப் பெருமாள் ஆகிறார் )

4) லாட சந்யாசி

5) தவசிராயர்

6) தவசி தம்புரான்

7) மாடன் தம்புரான்

8)முன்ன தம்புரான்

9) செல்லப் பிள்ளை ( சத்யகன் )

10) மேலவாசல் சங்கிலிபூதத்தார்

11) சட்டநாதர்

12) க்ஷேத்ர பாலர்

13) பெரும் பூதம்

14) கரும் பூதம்

15) கட்ட பூதம்

16) நட்ட பூதம்

17) ஒட்ட பூதம்

18) இடமலை பூதம்

19) வெள்ளக்கல் பூதம்

20) குண்டாந்தடி பூதம்

21) காஞ்சார பூதம்

22) இலங்காமணி பூதம்

23) நாகமணி பூதம்

24) பாதாள பூதம்

25) ஊமை பூதம்

26) ஆனந்த பூதம்

27) கருஞ்சடை பூதம்

28) பெரும்படை பூதம்

வேலு நாச்சியார்

வீரமங்கை வேலு நாச்சியாருக்கும் சிங்கம்பட்டி மறவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்த விவரங்கள்

ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதியின் ஒரே செல்ல மகளாகப் பிறந்தவர் வேலு நாச்சியார். நமது தற்போதைய சிங்கம்பட்டி ராஜா திரு.T.N.S. முருகதாஸ் தீர்த்தபதியின் தாயாரும், மனைவியும் வேலுநாச்சியார் பிறந்த ராமநாதபுர சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களே.

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து பின் அவர் மறைவிற்குப் பின் சிவகங்கை சமஸ்தான ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆங்கிலேயர்களை வென்று அரியணை ஏறியவர் வீரமங்கை வேலுநாச்சியார். நமது தற்போதைய சிங்கம்பட்டி ராஜா திரு.T.N.S. முருகதாஸ் தீர்த்தபதியின் மகள் சிவகங்கை சமஸ்தான T.S..கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜாவிற்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். அவர்களது மகளான திருமதி.T.S.K. மதுராந்தகி நாச்சியாரே தற்போதைய சிவகங்கை சமஸ்தானத்தின் ராணி ஆவார்.

1986 முதல் சிவகங்கை சமஸ்தான ராணியாக இருந்து வரும்  டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் சிலகாலம் தனது தாய்வழி தாத்தாவான நமது ராஜாவின் அரவணைப்பில் சிங்கம்பட்டி அரண்மனையில் வளர்ந்தவர் ஆவார். மேலும் தாய்மாமனான சிங்கம்பட்டி இளைய ஜமீன் சிங்கம்பட்டி ஜமீன்தார் T.N.S முருகதாஸ் தீர்த்தபதியார் -சேதுபர்வதவர்தினி நாச்சியாரின் தவ புதல்வர் மதிப்பிற்குரிய 32-வது சிங்கம்பட்டி பட்டத்துக்காரர் T.N.S.M.சங்கர ஆத்மஜன் ராஜாவை மணந்துள்ளார்.

சிங்கம்பட்டி - சிவகங்கை இரண்டு சமஸ்தானங்களுக்கும் ராணியான வாழும் வேலுநாச்சியார் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் கம்பீரமான தோற்றம் கொண்டவர். யாருக்கும் அஞ்சாத ஆளுமைத் திறன் கொண்டவர். சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் தேவஸ்தான கோவில்களை சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வருகிறார் எமது இளைய ராணி.

திருக்குறுங்குடி இறைவன்

திருக்குறுங்குடி இறைவன்

ஸ்ரீ சங்கிலிபூதத்தார் ஸ்வாமி
குளுமை வாய்ந்த களக்காடு மலை வந்திறங்கி
சலசலத்து ஓடும் நம்பியாற்றில் மூழ்கி ஸ்நானம் செய்து
தேக உஷ்ணத்தை தணித்து
ஆற்றங்கரை பாறையில்
சங்கிலியால் ஓங்கி அடித்து
ஒரு கசத்தை உருவாக்கி
நம்பியாற்றின் கரையில்
மூன்று நிலையங்கள் அமைத்து அமர்ந்தார்

சங்கிலியால் ஓங்கி அடித்த சப்தத்தால்
கடும்பாறை ஆனது
பொடிப் பொடியாகி
கசத்தில் நம்பியாற்று நீர்
பொங்கி வரும் பிரவாகமாய்
பெருக்கெடுத்து சலசலத்து
ஓடும் சப்தமதை கேட்டு
மலை நம்பி பெருமாள்
கோவிலை விட்டு வெளிவந்து
பூதத்தாரை நீர் யார் என்று வினவ
சட்டநாதன் ஆன சங்கிலி பூதத்தாரும்
யாம் சிவபுத்திரன்
பார்வதி தேவி என் அன்னை
நீங்கள் என் தாய்மாமா
நான் உங்கள் மருமகன் என்றே இனிதே செப்பி
அனைத்து விவரங்களும் கூற
பெருமாளும் தாயாரும்
அகமகிழ்ந்து பூதத்தாரின் வயிற்றுவலியை குணமாக்கி ஆசி வழங்கி
திருக்குறுங்குடியில் உள்ள
கீழ்நம்பி கோவிலுக்கும் ஊருக்கும் காவலாக இருக்க சொல்லி அனுப்பினர்

ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட
கீழ்நம்பி பெருமாளும்
பூதத்தாருக்கு
திருக்குறுங்குடி கோவிலையும் ஊரையும் சுற்றி
ஏழு நிலையங்கள் அமைத்து கொடுத்து நித்திய பூசைகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்
அவை என்னென்ன நிலையங்கள் என்றால்

1) கோவிலிலே ஒரு நிலையம்

2) குடவரை வாயிலில் ஒரு நிலையம்

3) பிரதான வாயிலில் ஒரு நிலையம்

4) மடப்பள்ளியில் ஒரு நிலையம்

5) தெற்கு மதிலில் ஒரு நிலையம்

6) அமரேத்து மண்டபத்தில் ஒரு நிலையம்

7) தேரடியில் ஒரு நிலையம்

இப்படியாக ஏழு நிலையங்கள் எழுந்தருளி
அமர்ந்தார் எங்கள் இறைவன்

சட்டநாதா சரணம்

வீரத்துறவி விவேகானந்தர் போற்றிய மன்னர் பாஸ்கர சேதுபதி

வீரத்துறவி விவேகானந்தர் போற்றிய மன்னர் பாஸ்கர சேதுபதி நமது மேதகு சிங்கம்பட்டி மகாராஜா T.N.S. முருகதாஸ் தீர்த்தபதியின் தாய்வழி பாட்டனார் ஆவார்.

உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர்.

பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிழ்ந்தார் விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர் மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு வழங்கிய நினைவுப் பரிசான அழகிய மரத்தினாலான யானைச் சிற்பம் நமது ராஜாவிற்கு அன்பு பரிசாக வழங்கப்பட்டு சிங்கம்பட்டி அரண்மனை அருங்காட்சியகத்தில் இன்று வரை இருக்கிறது.

சிங்கம்பட்டி ஜமீன் திரு. முரு­கதாஸ் தீர்த்தபதி.

தமிழ்நாட்டின் கடைசி ராஜா நமது சிங்கம்பட்டி ஜமீன் திரு. முரு­கதாஸ் தீர்த்தபதி.

தென் இந்தியாவில் எஞ்சியிருக்கும் பட்டம் கட்டிய ஒரே ராஜாவாகக் கருதப்படுப­வர்தான் நமது சிங்கம்பட்டி ஜமீன் திரு.  முருகதாஸ் தீர்த்தபதி. இவரது முழுப்பெயர் தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்­கர ஜெய தியாக முத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி. சுருக்கமாக டி. என். எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவரது தந்தை சங்கர தீர்த்தபதி.  ஆங்­கிலத்தில் மிகச்சிறந்த புலமை பெற்றுள்ள இவர் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர்.பலே நடனத்தில் புகழ் பெற்றவர். ரக்பி விளையாட்டிலும் முத்திரை படித்தால். தந்தை இறந்ததை அடுத்து மூன்றரை வயதில் இவருக்கு முடிசூட்டப்பட்டுள்ளது. அக்கால சம்பிரதாயப்படி முடி சூட்டப்படு­பவர் பிரேதத்தைப் பார்க்கக்கூடாதாம். அதனால் தந்தையாரின் பிரேதத்தைக்கூட இவருக்கு காட்டவில்லையாம்.

முடி சூட்டப்­படுபவர்களுக்கு ஆய கலைகள் அறுபத்து நான்கும் கற்பிக்கப்படுவதுண்டு. ஆனால் இவருக்கு அப்படி எந்த பயிற்சியும் அளிக்கப்­படவில்லையாம். இருந்தாலும் இவரோ குறி பார்த்து சுடுதல், ரக்பி, போலே நடனம், உதைப்பந்தாட்டம். சிலம்பு, வாள் வீச்சு என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளார்.

முடி சூட்டிய ராஜாக்களுக்கு இருக்கும் அபூர்வ சக்தி பற்றி குறிப்பிடும் இவர் நேபாள ராஜாக்கள் கோயிலுக்கு செல்வ­தில்லையாம். காரணம் அவர்கள் தங்களை விஷ்ணுவின் அவதாரமாக கருதுகிறார்­களாம். மழையில்லாத ஊருக்கு அரசர்கள் சென்றால் மழை பெய்யும் என்பது சாஸ்­திரம் மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையும் கூட. அதே போல 1984 ஆம் ஆண்டு மழையே காணாத மாஞ்சோலை  ஊருக்கு இவரை அழைத்தார்களாம்.
இவர் அங்கு போனது தான் தாமதம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. கிராம மக்கள் நன்றிக்கடனாக எனக்கு துலா­பார மரியாதை செய்தனர் என்கிறார் மிக நெகிழ்ச்சியாக இவர்.

ஒரு அரசருக்கு சிங்கத்தின் பெருந்தன்­மையும் யானையின் வலிமையும் வேண்டும் என்பார்கள். அதன் அடிப்படையி­லேயே
நமது ஜமீனுக்கு  சிங்கப்­பட்டி ஜமீன் என்று பெயர் சூட்டப்பட்­டுள்ளது என்று கூறும் இவர் சிங்கம் மற்றும் யானையின் தன்மை கொண்டதாகவே இன்னும் தன்னை உணர்வதாக குறிப்பிடு­கிறார் .

1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்து வந்தது. மேலும், சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன.
இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வருகிறார்.

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்துள்ளார்.

சிங்கம்பட்டி ஜமீன், பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளனர்.இன்று சிங்கம்பட்டி ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம்.

சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி.  சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் மறவர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில் இன்னொரு செய்தியையும் சொல்லியாக வேண்டும். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், நமது சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் கேரள ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார்.

ஜமீன்சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமையப்பெற்றுள்ளது. சிங்கம்பட்டி ஜமீனில் 1,000 குதிரைகளை வைத்துப் பராமரித்து வந்துள்ளனர். 5 தந்தப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தற்போது விவசாயம் செய்து வரும் நமது ராஜா ஜமீன்தார் திரு.முருகதாஸ் தீர்த்தபதி ஆயுள் காப்பீட்டு முகவராகவும் உள்ளார்.

இவ்வளவு பெருமை வாய்ந்த நமது சிங்கம்பட்டி ஜமீன் வரலாற்றை இயக்குனர் பொன்ராம்  நடிகர்கள் நெப்போலியன்,  சிவகார்த்திகேயன், சூரி இணைந்து "சீமராஜா" என்னும் திரைப்படமாக கொடுத்தார்கள் என்பது மேலதிக தகவல்.

நல்லகுட்டி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி

பிதாமகனார் சிங்கம்பட்டி ஜமீன்தார்

திவான் பகதூர் தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி

முப்பதாவது தலைமுறையில் தோன்றியவர்...

முன்னோர்களை போன்றவர் அல்ல...

வெகுஜன பூஜிதர்....

தயாள குணசீலர் ....

மறைவழிநிற்கும் மாமன்னர் அவரது தயாளகுண சீலத்தினை உணர்த்தி என்றும் நின்று பேசும் நினைவு சின்னங்களான

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை,

  அரசு மேனிலை பள்ளி

இரண்டும் அண்ணார் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகின்றன ...

மேலும் அவர் சென்னையில் உள்ள

விக்டோரியா கேஸில் கோஷா மருத்துவ பெருமனை,

காசி ஹிந்துக்கல்லூரி ,

மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனை,

லேடி அமிட் ஹீஹூல் (வெல்லிங்டன் நர்ஸிங் ஹோம்) சென்னை ,

நாகர்கோவில் இரக்க்ஷின்யசேனை முதலிய நிறுவனங்களுக்கு எல்லாம் தாராளமாக நிதி உதவி செய்துள்ளார்......