சனி, 3 நவம்பர், 2018

சிங்கம்பட்டி வகையறாக்களுக்கும் தென்னக பரதவர்களுக்கும் உள்ள தொடர்பு..

சிங்கம்பட்டி வகையறாக்களுக்கும்
தென்னக பரதவர்களுக்கும் உள்ள தொடர்பு..

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தென்பகுதியில் உள்ள விஜயாபதி காட்டிற்கு மதுரை சுற்று வட்டார பகுதியான சோழவந்தான் என்ற ஊரில் இருந்து காவல் பணிக்கு இரண்டு மறவர் சகோதர குடும்பங்கள் அழைத்து வரப்படுகிறார்கள் மூத்த சகோதரருக்கு குழந்தைகள் இல்லை ..

இரண்டாம் சகோதரருக்கு நான்கு ஆண் குழந்தைகள் ...

மூத்தவர் குடும்பம் கூத்தன்குழி பரதவர் கிராமத்தை காவல் காக்கும் பணியை செய்தார்கள்...

இளையவரின் ஆண்மக்கள் விஜயாபதி தில்லைவனம் பகுதியில் குடியிருப்புகளை உருவாக்கி இடிந்தகரை கிராமத்தை காவல் காக்கும் பணியை ஏற்றுக்கொண்டார்கள்..

காவல் பணி செய்யும் மறவர் குடும்பங்களுக்கு காவல் கூலியாக தினமும் மீன்களை பரதவர்கள் அன்புடன் கொடுப்பார்கள்...

அதுவரை இந்து பரதவர்களாக இருந்த கிராமங்கள் போர்த்துகீசியர்களுடன் செய்துகொண்ட போர் ஒப்பந்தத்தின் காரணமாக கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பத்திற்கு மாற தொடங்கினார்கள்..

இந்துவாக இருந்தபொழுது அவர்கள் வணங்கிய சிறுதெய்வங்கள் பரிவார தெய்வங்கள் பூஜைகள் கொடைவிழா இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது....

அப்பொழுதுதான் அந்த சம்பவம் நடந்தது காவல் கூலியாக மீன் வாங்கி கூத்தன்குழி ஓடைக்கரை வழியாக வந்த மறவர்கள் அவர்கள் கொண்டு வந்த ஒரு மீன் கீழே விழ அதை பூஜைகள் இல்லாமல் அருகே இருந்த பரதவர்கள் வணங்கிய சுடலை மாடன் கோவில் ஒன்றை பார்க்கிறார்கள்..

அங்கிருந்த ஒரு பழைய மாலையை கொண்டு அந்த மீன்களை சுற்றி பார்க்கனேரி கிராமத்திற்கு கொண்டு செல்கிறார்கள்....

அன்று அந்த மீன்களை கொண்டு சமைத்து சாப்பிட்ட குடும்பங்கள் மீது சுடலை மாடன் வருகிறார் ....
                                                          தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக