கவலைகள் தீர்ப்பார் கரையடி மாடசுவாமி
ஸ்ரீகரையடிமாடசுவாமி திருக்கோவில்
பிரான்சேரி
திருநெல்வேலி மாவட்டம்
நானிலம் உய்வுர ஸ்ரீ ஹரிஹர புத்திரன் பல ஆலயங்களில் தரிசனம் அருள்கிறார் அவ்வருள் முதன்மை ஸ்தலம் காரையார் சொரிமுத்துஅய்யனார் கோவில்
ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் படை தளபதி
ஸ்ரீ தளவாய் மாடசுவாமி அவரே பிரான்சேரி தலத்தில் கரையடி மாடசுவாமியாய் வீற்றிருந்து
அருள்பாலிக்கிறார்...
️ஸ்ரீ தளவாய் மாடசுவாமி
தாட்சாயிணி பார்வதி தேவியை மகளாக பெற்ற தக்க மகாராஜன் சிவனை அவமதித்ததால் வீரபத்திரரால் தலைகொய்யபடுகிறான் வெட்டுப்பட்ட தட்சனின் தலை, வேள்விக்குழியில் விழுந்து எரிந்தது. முண்டம் தரையில் விழுந்தது. தனது பதி மாண்டதை அறிந்து துடிதுடித்த தட்சனின் மனைவி தாருகாவல்லி, சிவனிடம் முறையிட்டாள். தவறை உணர்ந்து இனி நல்வாழ்வு வாழ, மீண்டும் அவருக்கு உயிர்பிச்சை இடுமாறு வேண்டினாள். அவளது அழுகுரலுக்கு இறங்கிய சிவபெருமான், வடக்கே தலை சாய்த்து உறங்கும் உயிரினத்தின் தலையை கொய்து உனது கணவனது உடலில் சேர்த்து வை, அவன் உயிர் பெற்று வருவான் என்று கூறினார். வேகம் கொண்டு எழுந்த தாருகாவல்லி, அங்கும் இங்கும் ஓடினாள், அலைந்தாள். சற்றுத் தொலைவில் கருப்புநிற ஆடு ஒன்று வடக்கே தலை சாய்த்து படுத்திருந்தது. அதன் தலையை கொய்து வந்து தனது கணவனின் உடலோடு ஒட்ட வைத்தாள். உயிர்பெற்று எழுந்தான் தட்சன். ஆட்டுத் தலையுடன் எழுந்த அவன் தனது கரங்களை கூப்பி, சிரம் தாழ்த்தி சிவனை வணங்கினான்.
மகாவிஷ்ணுவால் தாட்சாயிணி உடல்கள் சிதறுண்டு சக்தி பீடங்களாக மாறின. சிவனின் ஆங்காரமும் தணிந்திருந்த வேளை, தட்சனின் பணிவை கண்டு மனமிறங்கி, ‘‘நீயும் போற்றப்படுவாய், உன்னை வணங்கி துதிக்கும் அடியவர்களுக்கு கொல்லும் வரம், வெல்லும் வரம் அளிக்கும் பாக்யம் உனக்கு தருகிறேன். உடனே நீ பூலோகம் சென்று மகா சாஸ்தாவின் தளபதிகளில் ஒருவனாக திகழ்வாயாக,’’ என்று வரமளித்து பூலோகம் அனுப்பி வைத்தார்.தலை மாறிய சாமி என்றும் தலை மாறிய மாடன் என்றும் அழைக்கப்பட்ட அவர், பின்னர் தளவாய் மாடன் என்று அழைக்கப்பட்டார். தென்மாவட்ட மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார், தளவாய் மாடசாமி.
வீரியபெருமாள் சாஸ்தா கோவிலில்
ஸ்ரீகரையடிமாடசுவாமி
சொரிமுத்து அய்யனார் கோவிலில் வீற்றிருந்த தளவாய் மாடன் கீழ்நாடு தேசம் போகவேண்டும் தன்னை வழி பட குலமக்கள் வேண்டும் என்று சாஸ்தாவிடம் உத்தரவுபெற்று, தேவர் படைசூழ மாடன் மாடத்தியுடன் வரும் வழியில் பல இடங்களில் நிலையம் கொண்டார்.
கல்லிடைக்குறிச்சி பத்தமடை கொழுமடை பாதையாக பிரான்சேரி வந்தடைந்தார் சுவாமி .இதனை கண்டார் பிரான்சேரி யில் வீற்றிருக்கும் வீரியபெருமாள் சாஸ்தா. தன் பரிவாரங்களுடன் கொலுவிருந்து, வரும் மக்களின் கவலைகளை தீர்த்து குல தெய்வமாய் கொலுவிருக்குமாறு சொல்ல, சுவாமி குளக்கரையில் கரையடி மாடசுவாமி யாய் கொலுவிருந்து அருள்பலிக்கிறார்
வீரியபெருமாள் சாஸ்தா கோவிலில் படைத்தளபதியாய் கரையடி மாடசுவாமி , சுவாமி சங்கிலி பூதத்தார் , பேச்சியம்மன் சுடலைமாடசாமி தூசிமாடசாமி பாதாளகண்டி கருப்பசாமி பரிவாரங்கள் புடை சூழ அருள்கிறார்கள் இங்கு பங்குனி உத்திர தினத்தில் ஆயிர கணக்கில் பக்தர் கள் குவிகிறார்கள் மாதத்தில் கடைசி சனி கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன
திருநெல்வேலியில் இருந்து பத்தமடைசெல்லும் மார்கத்தில் #பிரான்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது நம்பி கைதொழும் பக்தர் வாழ்வில் காவலாய் நின்று அருள்கிறார் ஸ்ரீ கரையடி மாடசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக