வியாழன், 25 அக்டோபர், 2018

வென்னிமலைத்தேவர் வகையறாக்கள்

வென்னிமலைத்தேவர் வகையறாக்கள்

{ சிங்கம்பட்டி ஜமீன் மறவர் சமுதாயம்}

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கால்கரை கிராமம் இராதாபுரத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது...

கோவில்களில் ஊர்க்கோவில், குடும்பக்கோவில், சாதிக்கோவில் உறவுக்கோவில், என்று பல்வேறு வகைகளாக உள்ளது ...

ஊர்க்கோவில்களாக அம்மன் கோவில்களே விளங்குகின்றது..

கால்கரையில் ஊர் பொதுக்கோவிலாக முப்பிடாரி அம்மன் கோவில் இருக்கின்றது...

இந்த ஊரில் சுடலைமாடன் கோவில் வரிசையில் சிங்கம்பட்டி ஜமீன் வகையறாக்களுக்கு வேம்படிமாடன்,புலியூர் மாடன் ,மறுகால் சுடலை போன்ற மூன்று கோவில்கள் உள்ளன...

இதில் இராதாபுரத்தை பூர்வீகமாக கொண்ட #வென்னிமலைத்தேவர் குடும்பத்தாருக்கு இராதாபுரத்திலும் அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமான தோட்டக்காடுகள் கொண்ட பாப்பான்குளத்திலும் சுடலைக்கோவில்கள் உள்ளது....

வென்னிமலைத்தேவர் குடும்பத்தாருக்கு இராதாபுரத்தில் உள்ள புலிமாடசாமியே குடும்ப மாடன் ஆகும்...

புலிமாடசாமி கோவிலுக்கு திருமணம் ஆனவர்கள் வரிகொடுக்கவேண்டும் என்பது நடைமுறை...

ஆனால் முறையாக கடைபிடிக்கமுடியாமல் இருப்பதற்கு காரணம் இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட பத்தாயிரம் குடும்பங்கள் சூழ்நிலை காரணமாக பல இடங்களில் பிரிந்து வாழ்கிறார்கள்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக