புதன், 27 டிசம்பர், 2017

தூக்குதுரைதேவர் @ பெரியசாமிதேவர்

ஜமீன் சிங்கம்பட்டி மூன்றாவதாக அரண்மனை இடம் பெயர்ந்த இடம் . இங்கு அகத்தியர் மற்றும் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.

காலம் காலமாக ஜமீன்தார்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருந்து அகத்தியரையும், முருகப்பெருமானையும் வணங்கி கீர்த்தி பெற்றனர். இக்கோயிலில் முருப்பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாகம் மிகப்பெரிய திருவிழாவாக, விமர்சையாக நடக்கும்.

முதல் நாளே ஜமீன்தார்  கோயிலுக்கு வந்து விடுவார். மடப்பள்ளிக்கு மேல்புறம் உள்ள அறையில் தங்கி விரதமிருப்பார். சிறப்பு பூஜையில் கலந்து கொள்வார். முருகப்பெருமான்  வீதி உலாவரும் சப்பரத்தை வழியனுப்பிவைப்பார். மிக பிரமாண்ட சுற்றுச் சுவருடன் இக்கோயில் உள்ளது. அதில் சிறப்பு மிக்க கல்தூண்கள் பல உள்ளன.  ஒரு தூணில் தூக்குதுரை என்ற பெரியசாமி தேவர், வடக்கு நோக்கி உள்ளார். முறுக்கிய மீசை, மிடுக்கான தோற்றம், தீர்க்கமான கண்கள், தலைப்பாகையுடன் காட்சியளிக்கும் இவர், சிங்கம்பட்டி ஜமீனின் 24வது பட்டம் ஆவார். இவர் சிறைபிடிக்கப்பட்டிருந்த தனது நண்பனைக் காக்க ஜெயில்  வார்டனைக் கொலை செய்தார்.

இந்த குற்றத்துக்காக  ஆங்கிலேய அரசு இவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. 17.10.1884ல் தூக்கில் உயிர்நீத்த இவர் சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகளில் சிறப்பானவர் என்பதால் இவருக்கு இந்த சிற்ப மரியாதை! கந்த சஷ்டி விழாவின்போதும் ஜமீன்தார் கோயிலுக்கு வந்து விரதம் இருப்பார். சூரனை சம்ஹாரம் செய்த பின்னரே அங்கிருந்து அரண்மனைக்கு கிளம்புவார். சிங்கம்பட்டி ஊர் மக்களும் ஜமீன்தாரின் கோயில்களை வணங்கி வளம் பெறுகின்றனர். தங்களுக்கு எதிராக சதி செய்பவர்களைக்கூட ஜமீன்தாரின் வாரிசுகள் மன்னித்து விடுவர்; ஆனால், தெய்வத்துக்கு எதிராக சதி  செய்பவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்

ஜமீன் கோயில்கள்

சிங்கம்பட்டி ஜமீன்தார் வாரிசுகள் தங்களுடைய அரண்மனைகளை ஒன்றன் பின் ஒன்றாக தமது அலுவலுக்குத் தக்கவாறு மூன்று இடங்களில்  அமைத்திருந்தனர். அரண்மனை அருகே ஆலயங்கள் அமைத்து வணங்கி வந்தனர். அயன் சிங்கம்பட்டி பூதத்தார் கோயிலுக்கு பின்புறம் முதல் அரண்மனை  இருந்துள்ளது. தினமும் ஜமீன்தார் ஏவலர்கள் புடை சூழ மகாதேவர்  கோயிலுக்கு செல்வார். சிவனை மனமுருக வணங்கிய பிறகே அன்றைய  செயல்களைத் தொடங்குவர்.  அம்மையையும்,  ஐயனையும் திருவிழாக்காலங்களில்  பொன்னாலும் பூவாலும் அலங்கரித்து தங்களது தோளில் சுமந்து  வருவர். அரண்மனை இடம் மாறிய பிறகும்கூட இந்த வழக்கத்தை அவர்கள் விட்டு விடவில்லை. சிவபெருமான் உலகத்துக்குப் படியளக்கிறாரா  இல்லையா என்று  பார்வதி தேவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை சோதித்துப் பார்க்க ஒரு எறும்பை பிடித்து ஒரு ஜாடிக்குள் அடைத்து வைக்கிறார்.  படியளந்து விட்டு வந்த சிவபெருமானை பார்த்து, “ஐயனே எல்லோருக்கும் படியளந்து விட்ட நீங்கள், ஒரே ஒரு உயிர் மட்டும் பட்டினியால் கிடப்பதை   அறியவில்லையா?” என்று தேவி கேட்டார்.

சிரித்தார் சிவபெருமான்.  “தேவி, நீ எறும்பை அடைத்து வைத்திருக்கும் ஜாடியைத் திறந்து பார்,’’ என்றார்.பார்வதிதேவி திறந்து பார்த்தபோது, எறும்பு ஒரு  அரிசி மணியைத் தன் வாயால் பற்றியிருந்தது! ஈசன் எல்லா உயிருக்கும் படியளக்கிறார் என்பதை அம்பிகை புரிந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சி, கார்த்திகை  6ம் தேதி வைக்கத் தஷ்டமி  விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் ஆலயத்துக்கு இணையானது இந்த  சிங்கம்பட்டி மகாதேவர் ஆலயம். சிவபெருமான் அன்னம் வழங்கும் இத்திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் எல்லோருக்கும் அன்னம் வழங்கும்  அளவுக்குப் பொன்னும் பொருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். தங்களது மக்களுக்கு வாரி வழங்கும் அளவுக்கு பொன் பொருள் கிடைக்க வேண்டும்  என்பதற்காகவே ஜமீன்தார்கள் மகாதேவர் ஆலயத்தில் இத்திருநாளில் இறைவனுக்கு அன்னம் படைத்து அன்னதானமும் செய்கிறார்கள். இதே ஊரில்  உள்ள வெயிலுகந்த அம்மன் கோயிலும் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்டது தான். இந்தக் கோயிலுக்கு கூரை கிடையாது. இங்கு மார்கழி மாதம்தோறும் சிறப்பு  பூஜைகள் நடக்கும். 

சித்திரை மாதம் கோயில் கொடை விழாவின்போது மூன்றாம் நாள் இங்கு ஜமீன்தார் தனது பரிவாரத்துடன் வருவார். அவருக்கு பரிவட்டம் கட்டி  திருவிழாவை ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் நடத்துவர். இரண்டாவது அரண்மனை இருந்த இடம் ஏர்ம்மாள்புரம். மணிமுத்தாற்றின் மேற்கு கரையில் பச்சை  பசேலேன்று காணப்படும் வயல்வெளிகளுக்கு நடுவே இந்த ஊர் உள்ளது. இங்கிருந்து பார்த்தால் மலைகளை தழுவிச் செல்லும் வெண்மேகக்  கூட்டத்துடன் மணிமுத்தாறு அணை ரம்யமாய் காட்சி தரும். வெள்ளியை உருக்கி விட்டாற்போல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் 7 ஷட்டர்கள்  வழியாக கொட்டும். ஏர்ம்மாள்புரம் அரண்மனை அருகில் முப்பிடாதி அம்மன் கோயில் கொண்டுள்ளார். இவரை வணங்கிய பிறகே ஜமீன்தாரின்  முன்னோர்கள் தினமும் நகர் வலம் வருவர். இங்குள்ள முப்பிடாதி அம்மன் திரிபுர சுந்தரியின் அம்சம். ஜமீன்தார்கள் இவருக்கு ஒரு ஆலயம் அமைத்து  மூலவரை மரச்சிற்பமாக அமைத்து வணங்கி வந்தனர்.

புராதன சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்குள் பூசாரி மட்டும் நுழைந்து செல்லும் வண்ணம் நுழைவாயில் சிறியதாக இருக்கிறது. அம்மனின் கழுத்து, தோள்  மற்றும் வயிற்றை சுற்றியபடி நாகப்பாம்புகள்  காணப்படும். உள்ளே செல்லும் அர்ச்சகர் அம்மனை வணங்கி, “தாயே உனக்கு அலங்காரம் செய்து  ஆராதிக்க வேண்டும். தயவு செய்து நாகப் படைகளை அகற்று” என்று வேண்டி நின்றால்போதும். பாம்புகள் அம்மனை விட்டு இறங்கிச் சென்று விடும்.  அதன் பிறகே பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் செய்வார். முன்னூறு வருடங்களாக இது தொடர்கிறது! சிங்கம்பட்டி ஜமீன் வாரிசுகள் முப்பிடாதி அம்மனை தங்களது அன்னையாகவே பாவித்தார்கள். திருவிழாக்காலங்களில் அம்மனுக்கு அலங்காரம் முடிந்து திரை விலக்கும்போது, முதல்  ஆளாக பக்தி பெருக்குடன் நிற்கும் சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு தாயார் காட்சியளிப்பார். 

திங்கள், 20 நவம்பர், 2017

நெல்லையப்பர் கோவிலுக்கு கொடிமரம் வந்த கதை

நெல்லையப்பர் கோயில் கொடிமரத்திற்காக மரம் வெட்ட பொதிகை மலைக்கு போனவங்க விபரம் தெரியாம, சங்கிலி பூதத்தார் இருந்த பிரம்மாண்ட மரத்தை வெட்டி சாய்ச்சுட்டாங்க…. அந்த காலத்துல என்ன இப்போ மாதிரி லாரி,டிரெயிலரா உண்டு….. வெட்டின மரத்துல 'நெல்லையப்பர் கோயில் கொடிமரம்'ன்னு குறிப்பு எழுதி தாமிரபரணி ஆத்துல தள்ளிவிட்டுட்டு  எல்லோரும் திரும்பி வந்துட்டாங்க… மழை பெஞ்சு தாமிரபரணி ஆத்து வெள்ளத்துல மிதந்து வந்த மரம் திருநெல்வேலி சேந்திமங்கலம் (மணிமூர்த்திஸ்வரம் ) பக்கத்துல கரை ஒதுங்கிட்டு. குறிப்பு பார்த்த ஊர்மக்கள் கோயிலுக்கு தகவல் சொல்லி விட கோயில்ல இருந்து 50.60 மாடு கட்டுன பெரிய வண்டியோட வந்து மரத்தை ஏத்தி கொண்டு போனாங்க….

டவுண்  நெல்லையப்பர் கோயில் தெப்பக்குளம் வரை போன வண்டி அதுக்கு மேல நவுர மாட்டேன்கிது… 100 குதிரையை கட்டி இழுங்காங்க… 50 யானையை கொண்டு இழுக்காங்க… வண்டி அசையக்கூட இல்லை…. இது என்னடா சோதனைன்னு எல்லாரும் முழிச்சுகிட்டு இருக்கும் போது ஒரு வயசான ஆளு மேல சங்கிலி பூதத்தார் சாமி வந்து ‘ நான் இருந்த மரத்தை  வெட்டி கொண்டு வந்துட்டியளேடா’ ன்னு குதிச்சு, குதிச்சு ஆடுதாரு. ‘ சரி.. நடந்தது நடந்து போச்சு..என்ன பரிகாரம் பண்ணனும்’ன்னு கோயில் நிர்வாகத்தார் கேட்க, ‘கோயிலைச் சுத்தி 21 நிலையம் வச்சு வருஷம் தவறாம கொடையும் விட்டு கொடுக்கணும்’ன்னு சத்தியம் வாங்கின பிறகுதான் வண்டி நவுண்டுச்சாம்…கொடி மரமும் கோயில் போய் சேர்ந்துச்சாம்…

திருநெல்வேலி டவுணுக்கு எப்போ போனாலும் பாருங்க… தெப்பக்குளம் கரையில ரோட்டுப்பக்கமா 'முத்து மண்டபம்'ன்னு பூதத்தாருக்கு முதல் நிலையமும், அப்படியே நெல்லையப்பர் கோயில் கோட்டைச்சுவரை சுற்றி எல்லா ரத வீதியிலயும்  மத்த கோயில்களும் இருக்கு… இப்படித்தான்  அந்த இடத்துக்கு ‘பூதத்தான் முக்கு’ன்னும் பேரு வந்துச்சு. வருஷாவருஷம் கொடையும், பூக்குழி இறங்குறதும் ரொம்ப விஷேசமா நடந்துகிட்டு இருக்கு…

வெள்ளி, 10 நவம்பர், 2017

சனதான தர்மம் புகழ் பெற்ற சாஸ்தா ஆலயங்கள்

நீண்ட நாள் தேடுதலுக்கு பிறகு சாஸ்தா ஆலயங்கள் பற்றிய விவரங்களை சிங்கம்பட்டி உறவின்முறை பக்கம் சார்பாக வெளியிடுகிறோம் ..

Sanathana Dharma -Famous Sastha Temples

{சனதான தர்மம் புகழ் பெற்ற சாஸ்தா ஆலயங்கள் }

1.Karaiyaar Sorimuthu Ayyanaar Temple { மூலஸ்தானம்}

Kerala Tourism

2.Thrikkunnapuzha Dharmasasthavu

3.Thiruvullakkavu Sasthavu

4.Aryankavu dharmaSasthavu

5.Chambrakulangara ayyappan

6.Chamravattam Sasthavu

7.Achan kovil darmaSasthavu

8.Kulathupuzha Sasthav

9.Kolakkottiri ayyappankavu

10.Sabarimala Sreedharma Sasthavu

11.Kizhakedesam Sasthavu

12.Meenachil Sasthavu

13.Arakkulam dharmaSasthavu

14.Mattil Sasthavu

15.Cheruthazhathukavu Sasthavu

16.Kalleli Sasthav

17.Nandikeswarankavu Sastha

18.Thakazhi dhramaSasthavu

19.Chakkamkulangara dharmaSasthavu

20.Aarattupuzha Sasthavu

21.Manaloor ayyappan kavu

22.Manakodi Sasthavu

23.Edathra Sasthavu

24.Edathuruthi ayyappan kavu

25.Kanyakulangara dharmaSasthavu

26.Nettissery Sasthavu

27.Mulankunnathu kavu darma Sasthavu

28.Udalakkavu Sasthavu

29.Kodumpu ayyappa

30.Manakkadu dharmaSasthavu

31.Thykkadu Sasthavu

32.Akamala sreedharma Sasthavu

33.Thottakkare molukurussy ayyappankavu

34.Ayyankuzhikkavu Sasthavu

35.Kollankodu Pulikkodu ayyappan

36.Cherpulasery ayyappan kavu

37.Poonjal darmaSasthavu

38.Punchapadam pulinkkavu ayyappa

39.Theeyadikkavu

40.Nagalassery ayyappankavu

41.Mundamuka ayyappan

42.Thichur Sasthavu

43.Malamakkavu ayyappan

44.Nangulam Sasthavu

45.Neriyamangalam Sasthavu

46.Aanaparambu daramaSasthavu

47.Thayankavu Sasthavu

48.Perungottukavu Sasthavu

49.Kothakulangara Sasthavu

50.Mangalam ayyappan kavu

51.Chemeli dharmaSasthavu

52.Pottankkavu Sasthavu

53.Thiruvarchanamkunnu Sasthavu

54.Malamakkavu ayyappan

55.Thrikkalathur Sreeraman

56.Vayaskkara dharmaSasthavu

57.Narayanamangalam ayyappankavu

58.Sakthikulankara Sasthavu

59.Ayyappanpara Sasthavu

60.Manalithara mullapallikavu Sasthavu

61.Kuttoor Sasthav

62.Pattikkadu dharmaSastha

63.Markkadakkavu Sastha

64.Koodapuzha marathopalli Sasthavu

65.Neervilagam dharmaSasthavu

66.Kaattuvalli dharmaSastha

67.Karukuttikkavu Sasthavu

68.Kozhikkal kandan Sasthavu

69.Ezhinjillam Sasthavu

70.Kannanallur Sasthavu

71.Kutiyothu temple Sastha

72.Kannadiparambu dharmaSasthavu

73.Chethamangalam ayyappan

74.Chovvara Sasthavu

75.Edaneer vishnu

76.Kolasserykavu Sastha

77.Paduvilakkavu Sastha

78.Kaarakkattu Sreedharma sasthavu

79.Paandangari dharmaSastha

80.Rampuram Sasthavu

81.Kanimangalam Sasthavu

82.Elampalli madathil dharmaSasthavu

83.Cheerappanchira mukkalvattam ayyappa

84.Vyasachalam Sasthavu

85.Karthyakulangara SreedharmaSastha

86.Thechikkottukavu Sastha

87.Mupuramkavu SreekandanSasthavu

88.Varamsasthamkotta temple Sasthavu

89.Pullukulangara darmasasthavu

90.Thrikkadambu Sastha temple

91.Chathankottakavu Sastha

92.Kodannoor Sasthavu

93.Mangattu kavu ayyappan

94.Velupilli dharmaSastha

95.Rarothu ayyappa

96.Thrivuvaniyoor Sastha temple

97.Malamel Sastha temple

98.Areswaram Sasthavu

99.Karimpuzha Sreeraman temple

100.Chathannoor bhoothanathan (siva temple)

101.Ponnabalamedu Sasthavu

102.Koovapalli narkkalakavu Sasthavu

103.Mundarakodu ayyappa

104.Eramam muthukkattukavu ayyappan

105.Kochambalam Sastha

106.Erumeli dharmaSasthavu

107.Kezhoor dharmaSasthavu

108.Niram kaithakkotta Sasthavu

109.Arangavu Sasthavu

Southern  Tamilnadu

1.Asta Sastha temple Veppampattu

2.Sri Aathinamalagi ayyanar Sastha temple -Veerakerlamputhur

3.Veliyappa Sastha temple Sankankovil

4.Vaiyachzlingam Sastha Sankarankobil

5.Nadukavudayaar Sastha Palaiyankottai

6.Megalinga Sastha

7.Vagaikulam Sastha

8.Pervempudayar Sastha Naanguneri road

9.Pooludayar Sastha Marukalthalai

10.Vennir udayar Sastha kalakad

11.Kundrumalai Sastha Muthiyapuram

12.Poo Sastha temple South karunkulam

13.Sri Malaimaari Sastha Pakkaneri

14 .Aagasa Nambi Udaiyar Sastha kesavaneri

15.Pandanaatheeswarar Sastha Chenkottai kannupozhimettu

16.Sundarapandi Sastha karaiyiruppu

செவ்வாய், 7 நவம்பர், 2017

தேவரின் ஆன்மீக சீடர் வள்ளியூர் G.மகாகணபதித்தேவர்

தேவர் திருமகனுக்கு ஆன்மீக தெளிவு கொடுத்த   மகேந்திரகிரி மலையை பற்றி சிறு பதிவு .....

இந்திய எல்லையை கடந்து தன் தங்க தலைவரை பார்க்க சீனா எல்லை சென்றார் .தன் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பார்த்துவிட்டு கேரளா வழியாக இந்தியாவிற்கு நுழைந்தார் .

தன் ஆன்மீகத்தை தெளிவுபடுத்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரகிரி மலை தொடருக்கு வந்தார்.அம்மலை இமயமலையில் உருவாகி திருநெல்வேலியில் முடிவடைகிறது .

அதுதான் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும்.கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமான் ஜடாமுடியே மேற்கு தொடர்ச்சி மலையாகும்.தன் ஆன்மிகத்தை உறுதி படுத்த சரியான இடம் மகேந்திரகிரி மலைதான் என்பதை உணர்ந்த 
தேவர் அம்மலைக்கு வந்தடைந்தார்.

அவருடன் வள்ளியூர் ஜி எம் மகா கணபதி தேவர் அவர்களும் வந்தனர் தன் இஷ்ட தெய்வமான.அங்கே இருக்கும் முருகப்பெருமானை மன முருகவழிபட்டு மலையின் அடிவாரத்தை தொட்டு வணங்கி அந்த  கானகத்தாயின் மடியினிலே தஞ்சம் புகுந்தனர்.இருவரையும் யாரும் கண்களுக்கு படாமல் அந்த தாய் மறைத்து கொண்டாள்.

தன்ஆறு மாத கடும் தவத்தினால் முக்காலத்தையும் உணரும் சக்தி படைத்தார் .அகிலத்தில் நடப்பது அனைத்தும் அவருக்கு புலப்பட்டது .அங்கேதான் அவரை லட்சோப லட்சம் மக்கள் வழிபடபோகும் உருவத்தை மாற்றினார்.

மீசையை எடுத்து நீண்ட முடிவளர்த்து மானிடராக உள்ளே நுழைந்த அவர் மிகப்பெரிய மகானாக வெளியே வந்தார் .அன்று முதல் மக்கள் அவரை இவர் ஒரு தெய்வீக பிறவி என்றனர் .

பொள்ளாச்சியில் ஒரு ஆன்மீக சொற்பொழிவு ஆற்ற வந்த தேவர் மேடையில் ஏறி பேச ஆரம்பித்தார் .அப்போது கூட்டத்திற்கு மத்தியில் ஓரே கூச்சல் குழப்பங்கள் .கூட்டத்தில் ஒரு பாம்பு உள்ளே நுழைந்தது .அப்போது தேவர் ஐயா பேசுகிறார் யாரும்பயப்பிட வேண்டாம் .தன் பேச்சை கேட்க அந்த பரமாத்மாவே ஆதிசேஷியனாகவே வந்துள்ளார் அவருக்கு வழி விடுங்கள் தன் பேச்சை கேட்டு முடித்தவுடன் அவரே சென்று விடுவார் என்றார்.....

அவ்வளவுதான் கூட்டம் பாம்புக்கு வழிவிட்டது மேடையருகே வந்துநின்றது.கூட்டம் முடிந்தவுடன் அமைதியாக சென்று அந்த பாம்பு மறைந்தது.அன்று கொங்கு மண்டலமே இதை பரபரப்புடனும் வியப்புடனும் பேசிக்கொண்டது....

கடுக்கரை பொன்பாண்டித்தேவர்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதன்மை தளபதி  #பொன்பாண்டி தேவரின் மறைக்கப்பட்ட வரலாறு

எட்டுவீட்டு பிள்ளைமார்களின் சூழ்ச்சியை முறியடித்து மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரியணை ஏற காரணமாக இருந்தவர்கள்  #சிங்கம்பட்டி பாளையமன்னர்கள் ...

அவர்களது வழியில் மார்த்தாண்ட வர்மாவிற்கு சிங்கம்பட்டி மறவர்களே தளபதிகளாக இருந்து வந்துள்ளனர் ..அவர்களில் ஒருவர்தான் கடுக்கரையை சேர்ந்த பொன்பாண்டி தேவர் .....

#குளச்சல் போரின் போது டச் படைகளை சாதுரியமாக வென்று மார்த்தாண்ட வர்மாவின் நன்மதிப்பை பெற்றார் ...

இவரது காலத்தில் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  ஏராளமான நிலங்கள் சிங்கம்பட்டி மறவர்களுக்கு  மார்த்தாண்ட வர்மாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.....

பெரியதம்புரான் [ஐவர் ராசாக்கள்]


செவிவழிக் கதைகள் நம் மண்ணில் ஏராளம். மனிதர்களாக நம்முடனேயே வாழ்ந்து மறைந்து, நம் மக்களால் தெய்வமாகக் கொண்டாடப்படுபவர்களின் கதைகளும் அவற்றில் அடக்கம். ஊர் - கிராமத்துக்கு ஒதுக்குப்புறமாக அல்லது ஊருக்குள்ளேயே கோயில்... அதில் ஒரு தெய்வம்... என தமிழகத்தின் பல ஊர்களில், கிராமங்களில் எத்தனையோ தெய்வங்கள், எத்தனையோ பெயர்களில் அருள்பாலிக்கிறார்கள். அவர்கள் யார், வரலாறு என்ன, எப்படி தெய்வமானார்கள்... முடிந்தவரை விரிவாகப் பேசுவோம்!

தென்றல் இதமாக வீசிக்கொண்டிருந்த மாலை நேரம். மேல் மாட உப்பரிகை. அந்த நேரத்தில் வீதியைப் பார்த்து ரசிப்பது அலாதியான அனுபவம். அது இளவரசிக்குப் பிடிக்கும். பழங்களையும் காய்கறிகளையும் கூவி விற்கும் சிறு வணிகர்கள்... மாலை சூரிய ஒளியில் காதிலும் கழுத்திலும் மூக்கிலும் ஆபரணங்கள் மின்ன கூடைகளை ஏந்திக்கொண்டு பொருள்களை வாங்கச் செல்லும் நகரப் பெண்கள்... பாதசாரிகள்... யார் மீதாவது மோதிவிடுவோமோ என்கிற துளி அச்சமுமின்றி வீதியின் குறுக்கே குதித்தோடி விளையாடும் சிறுவர்கள், சிறுமிகள்... பார்த்துக்கொண்டே இருக்கலாம். மாலைப் பொழுது அழகு. மனிதர்கள் அழகு. ஏன்... இந்தப் பிரபஞ்சமே அழகுதான். அப்போதுதான் சில பண்டாரங்கள் எதையோ சுமந்துகொண்டு போவது இளவரசியின் கண்ணில்பட்டது.

`அட.... அது என்ன ஓவியமா? இதுவல்லவா அழகு? ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும் முகமோ அழகுக்கெல்லாம் அழகாக அல்லவா இருக்கிறது?’ இளவரசி சேவகர்களை விரட்டினாள். அந்தப் பண்டாரங்களை அரண்மனைக்கு அழைத்துவரச் சொன்னாள். அது ஓர் இளைஞனின் ஓவியம். சுருள் கேசம், இடுப்பில் கைவைத்து நிற்கும் ஒய்யாரம், பரந்த மார்பு, அத்தனையும் சேர்ந்து அளவில்லா கம்பீரம். பார்க்கப் பார்க்க பரவசம் படுத்தியெடுத்தது இளவரசிக்கு. ஓவியமாக இருந்த இளைஞனை உயிர்ப்பொருளாக உடனே காணமாட்டோமா என நெஞ்சம் விம்மியது. தகவல் அறிந்து அரசர் வந்தார். கன்னட தேசத்தின் கண்மணியல்லவா அவர் மகள்! மகளின் முகக் குறிப்பிலேயே விருப்பத்தை அறிந்துகொண்டார். விசாரணை ஆரம்பமானது. பண்டாரங்களை விசாரித்ததில் ஓவியத்தில் காணப்பட்டவன், தென் தமிழகத்தை ஆண்ட குலசேகர பாண்டியன் என்பதை அறிந்துகொண்டார் அரசர். 

கன்னட தேசத்திலிருந்து குலசேகரனின் வள்ளியூர் கோட்டைக்குத் தூது பறந்தது. `எம் பெண்ணை மணக்கச் சம்மதமா?’ என்கிற ஒற்றைக் கேள்வியை விலாவரி தூதாக அனுப்பியிருந்தார் கன்னட அரசர். குலசேகர பாண்டியனுக்கு விருப்பமில்லை. என்னதான் அரசனாக இருந்தாலும் கன்னடன், அந்நியன், எதிரிநாட்டான். பாண்டிய நாட்டை வளைத்துப்போட நேரம் பார்த்துக் காத்திருப்பவன்.

வார்த்தைகளிலேயே தன் மறுப்பைத் தெரிவித்து, தூதைத் திருப்பி அனுப்பினான் பாண்டியன். சாதாரண மனிதர்களுக்கே நிராகரிப்பு, வலியைத் தரும் ஒன்று. தூது அனுப்பியதோ அரசன்... கன்னட தேசத்தின் தலைவன். புறக்கணிக்கக்கூடியவளா தன் மகள்? கொதித்தான்... படையெடுத்தான். குலசேகரனின் கோட்டையை முற்றுகையிட்டான். 

குலசேகர பாண்டியன், வீரத்தலைமகன். அச்சம் என்பதை அறியாதவன். அவனின் உயிர்க் கவசமாக நான்கு தம்பிகள். துணைக்கு `மன்னன்’, `மதிப்பன்’ என இரு வீராதி வீரர்கள்... இருவரும் அண்ணன், தம்பிகள். எழுவரும் இணைய, இவர்கள் சொல்படியெல்லாம் ஆடியது பாண்டியன் படை. முற்றுகையிட முடிந்த கன்னட அரசனின் படையால், மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. பொறுமை காத்தான்... புதுப்புதுத் திட்டங்களைத் தீட்டினான்... காத்திருந்தான். ஒருவழி புலப்பட்டது. `குலசேகரனின் பாதுகாப்பு அரணாக இருப்பவர்கள் இரு முக்கியமான மாவீரர்கள்... மன்னன், மதிப்பன். அவர்களை அழித்தால்?!’ சதித்திட்டத்தை நிறைவேற்ற ஒரு கன்னட வீரன் முன்வந்தான்.   

வீரத்தால் பலிகொள்ள முடியாத உயிரைக்கூட சில நேரங்களில், கபடு சாதித்துவிடும். அது சந்நியாசிகளையும் அடியார்களையும் மக்கள் மனதார நம்பிய காலம். அதைப் பயன்படுத்திக்கொண்டான் அந்தக் கன்னட வீரன். ஆண்டி வேடம் அணிந்தான். எளிதாகக் கோட்டைக்குள் நுழைந்தான். மாவீரன் மன்னனை நயவஞ்சகமாகச் சாய்த்தான். தலையை வெட்டி கையோடு எடுத்துச் சென்றான். மன்னனின் சகோதரன் மதிப்பன் கொதித்தான். ஆண்டி வேடம் பூண்ட கன்னட வீரனைத் தேடிப்போனான். கண்டுபிடித்து, தன் சகோதரனுக்கு நேர்ந்த கொடுமைக்குப் பலியாக, அவன் தலையை வாங்கினான். பிரச்னை அதோடு தீரவில்லை. கன்னட அரசனின் படைகள் கோட்டைக்கு வெளியே முகாமிட்டு, முற்றுகையைத் தொடர்ந்தன. `உங்கள் பலம் எங்களிடம் செல்லாது’ என்பதுபோல் கம்பீரம் காட்டி, எதிரிப் படையை வழிமறித்து நிமிர்ந்து நின்றது கோட்டை.  

ஒருநாள் கோட்டைக்கு வெளியே யாதவப் பெண் ஒருத்தி தயிர் விற்றுக்கொண்டிருந்தாள். அங்கே முகாமிட்டிருந்த கன்னடப் போர் வீரர்களில் ஒருவன் அவள் அருகே வந்தான். அவளை வார்த்தைகளால் சீண்ட ஆரம்பித்தான். பேச்சு மெள்ள மெள்ள அவள் கையிலிருந்த குவளையை நோக்கிப் போனது. அதையும் விட்டுவைக்கவில்லை அவன்... கிண்டல் அடித்தான். அவளுக்குச் சட்டென்று கோபம் வந்துவிட்டது. ``ஏய்... எதை வேண்டுமானாலும் பேசு... இந்தக் குவளையைப் பற்றிப் பேசாதே. இது என் பிரியத்துக்குரியது. இதன் மகிமையை அறிவாயோ நீ? இந்தக் குவளை ஒருமுறை கோட்டைக்கு வெளியே இருக்கும் மடையில் விழுந்துவிட்டது. `ஐயோ.. நம் பிரியத்துக்குரிய குவளை போய்விட்டது’ என்றே முடிவு செய்துவிட்டேன். அன்றைக்கு அதை நினைத்து என்னால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அடுத்த நாள் கோட்டைக்குள் போனேன். அங்கே இருக்கும் சிறு ஏரியில், இதே குவளை, கரையோரமாகக் கிடந்தது. என் அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வாய்?’’ என்றாள்.

இதைக் கேட்ட அந்த வீரன் அசந்துபோனான்.

அந்தப் பெண் கூறியதில் இருந்து, கோட்டைக்குள் ரகசிய மடை வழியாகத் தண்ணீர் செல்கிறது என்பதை யூகித்துக் கொண்டான். விஷயம் கன்னட அரசனின் காதுக்கும் போனது. அந்த அப்பாவிப் பெண்ணின் உதவியுடன், மடையைக் கண்டுபிடித்து அடைத்தார்கள். கோட்டைக்குள் தண்ணீர் செல்வது நின்றது. நீர்வரத்து இல்லாமல் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமானது. கோட்டையிலிருந்த வீரர்களும் பொதுமக்களும் தவித்தார்கள்.

ஒரு கட்டத்துக்கு மேல், குலசேகர பாண்டி யனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வெளியில் இருந்து யாராவது உதவினால்தான் பிழைப்போம் என்கிற நிலை. தன் உறவினனான வேணாட்டு அரசனுக்கு உதவிகேட்டு ரகசியச் செய்தி அனுப்பினான். உதவி கிடைக்கவில்லை. கன்னட வீரர்கள் போருக்கு ஆயத்தமாகும் செய்தி வந்தது. குலசேகர பாண்டியனைத் தப்பித்துப் போகும்படி தம்பிகள் வற்புறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் குலசேகரன் கொஞ்சம் வீரர்களுடன் அரண்மனையில் இருந்த சுரங்கம் வழியாகத் தப்பித்துக் காட்டுக்குள் சென்றான். நீண்ட நாள் முற்றுகை... களைப்பு... தலைவன் இல்லாமல் நம்பிக்கை இழந்த வீரர்கள்... இத்தனை இக்கட்டுக்கு மத்தியிலும் பாண்டியனின் நான்கு தம்பிகளும் கன்னட வீரர்களுடன் உக்கிரமாகப் போர் புரிந்தார்கள், கடைசிவரை போராடினார்கள், மடிந்தார்கள்.

தம்பிகள் மாண்டுபோன செய்தி அறிந்தான் குலசேகரன். காட்டிலிருந்து கோட்டைக்கு வந்தான். கன்னட அரசனுடன் போரிட்டான். தோற்றுப்போனான். கன்னடன் பாண்டியனைக் கொல்லவில்லை. அவனைப் பிடித்து, பல்லக்கிலே ஏற்றினான். தன்னோடு அழைத்துச் சென்றான். `எங்கிருக்கிறோம்... எங்கே போகிறோம்?’ எதுவும் தெரியவில்லை குலசேகரனுக்கு.

வழியில் ஓர் இரவு வேளை. பல்லக்கு இறக்கிவைக்கப்பட்டது. பரிவாரங்கள் இளைப்பாறுவதற்கான இடைவேளை அது. பல்லக்கில் உறக்கம் இல்லாமல் கிடந்த குலசேகரனுக்குப் பல்லக்குத் தூக்கிகளின் உரையாடல் காதில் விழுந்தது.

``இந்த ராசாவை எங்கே கூட்டிக்கிட்டுப் போறாக தெரியுமா?’’

``எங்கே?’’

``கன்னட தேசத்துக்கு... அங்கே கன்னட இளவரசி காத்துக்கிட்டு இருக்காங்க. அங்கே போனதும், பாண்டிய ராசாவுக்கும் இளவரசிக்கும் கல்யாணமாம்...’’

``ஏய் மெதுவாப் பேசு... பாண்டியராசா காதுல விழுந்துடப் போகுது...’’ 

அவர்கள் அத்தனை மெதுவாகப் பேசியிருந்தாலும், அது பாண்டியனின் காதுகளில் விழவே செய்தது. `வேண்டாம்’ என தான் ஒதுக்கிய இளவரசி... அவள் பொருட்டு நடந்த யுத்தம்... ரத்த வெள்ளத்தில் மாண்டுபோன தம்பிமார்கள்... வீரர்கள்... நினைக்க நினைக்க நெஞ்சம் பதறியது குலசேகர பாண்டியனுக்கு. அதன்பின் ஒரு கணமும் அவன் தாமதிக்கவில்லை. இடுப்பிலிருந்த குறுவாளை எடுத்தான். தன் மார்பில் இதயத்துக்கு நேராக மிகச் சரியாகப் பாய்ச்சினான். உயிரைவிட்டான். குலசேகரன், தன் உயிரை மாய்த்துக்கொண்டதை யாரும் அறியவில்லை.

பல்லக்குப் புறப்பட்டது. கன்னட அரசனின் இருப்பிடம் சேர்ந்ததும் இறக்கி வைக்கப்பட்டது. அங்கே, குலசேகரனுக்காகக் காத்திருந்தாள் இளவரசி. நாணம் தடுத்தாலும், அவனைப் பார்க்க வேண்டும் என்கிற வேட்கை அவளைத் துரத்தியது. ஆவலுடன் பல்லக்கின் திரைச்சீலையைத் திறந்தாள். அங்கே ரத்த வெள்ளத்தில் பாண்டியன் இறந்துகிடந்ததைப் பார்த்தாள். அலறினாள். விழுந்து புரண்டு அழுதாள். அவளை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.

இறந்துபோன குலசேகர பாண்டியனைச் சிதையில் வைத்து எரித்தார்கள். `என்னை மணக்காவிட்டாலும் இவரே என் கணவர். இவர் இல்லாத பூமியில் இனி நான் இருக்க மாட்டேன்’ என்று கூறி, அந்தச் சிதையிலேயே விழுந்து மடிந்தாள் இளவரசி. இறந்துபோன இருவரும் கயிலை சென்று சேர்ந்தார்கள். சிவபெருமானிடம் வரம்பெற்று தெய்வமானார்கள்.

குலசேகர பாண்டியனுக்கும் வடுகச்சிக்கும் (கன்னட இளவரசி) தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சில ஊர்களில் இன்றைக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம், கண்டப்பத்து கிராமம், தூத்துவாலை அய்யனார் கோயிலில் `வன்னிராஜா’ என்ற பெயரில் அந்தப் பாண்டியன் வழிபாடு செய்யப்படுகிறான். இதே மாவட்டத்தில் குதிரைமொழி, எள்ளுவிளை கிராமங்களில் பாண்டியன், `கருவேள்ராஜா’ என்ற பெயரிலும் கன்னட இளவரசி, `வாடாப்பூ அம்மன்’ என்ற பெயரிலும் தெய்வமாக அருள்பாலிக்கின்றனர்.

பாளையங்கோட்டை, ஜெயந்திமங்கலம் கிராமத்தில் குலசேகரனுக்கும் அவனது நான்கு தம்பிகளுக்கும் வழிபாடு நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் பொத்தையடி, கலைநகர், மேலாங்கோடு, கட்டிமாங்கோடு போன்ற ஊர்களிலும் இவர்களுக்கு வழிபாடு உண்டு. இந்த ஊர்க்கோயில் விழாக்களில் குலசேகர பாண்டியனின் கதைப்பாடலை, வில்லுப்பாட்டாகப் பாடுகின்றனர். `ஐவர் ராசாக்கள்’ என்னும் இந்தக் கதைப்பாடல் 5,871 வரிகள் கொண்டது. இப்போதும் சில கோயில்களில் மூலக்கதைப் பாடலை முழுவதும் பாடுகின்றனர்.

நாகர்கோவில், கலைநகர் குலசேகரத்தம்புரான் கோயிலில் தமிழ் ஆனி மாதம் (ஜூன் - ஜூலை) வெள்ளி, சனிக்கிழமைகளில் விழா நடக்கிறது. வெள்ளி இரவு ஒரு மணிக்குப் பூஜை ஆரம்பமாகும். முதல் பூஜை பாண்டிய வீரர்களுக்கு. கோயிலுக்கு வெளியே 100 வெற்றிலை, பழம், பத்தி வைத்துச் சூடம் ஏற்றி வழிபடுவார்கள். இந்த `வெற்றிலைப் படையல்’ பாண்டிய வீரர்களின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது.

பின்னர் குலசேகரனுக்குப் பூஜை நடக்கும். கருவறையில் நின்றகோலத்தில் வீரனின் கற்சிற்பம்; கையில் ஆயுதம் உள்ளது. அரசனின் முகச்சாயல் அழகாகத் தெரிகிறது. வெள்ளிக்கிழமை இரவு பாண்டியனின் கதையைப் பாட ஆரம்பித்து, சனிக்கிழமை பகல் 2 மணிக்கு முடிக்கின்றனர். காலையில் சிறிது நேரம் இடைவேளை. பாண்டியனுக்காக ஆடுபவர், கையில் வாளைப் பிடித்து ஆடுகிறார். கட்டிமாங்கோடு, குலசேகரர் கோயிலில் ஆடுபவர், வாழைக்குலையைக் கையில் பிடித்துக்கொண்டு கத்தியால் வெட்டியபடி ஆவேசமாக ஆடுவார். இது கன்னட வீரர்களைக் கொல்வதாக நடித்துக் காட்டப்படும் ஆட்டம்.

வடுகச்சி அம்மனை வழிபட்டால், பெண்களின் கர்ப்பப் பிரச்னை தொடர்பான துன்பம் இல்லாமல் தீரும். நல்ல கணவன் கிடைப்பான் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. குலசேகர பாண்டியன் காலத்தில் வாழ்ந்த, வீணாதி வீணனுக்கும் வழிபாடு உண்டு. இவன் கதையும் சுவாரஸ்யமானதே!...