தேவர் திருமகனுக்கு ஆன்மீக தெளிவு கொடுத்த மகேந்திரகிரி மலையை பற்றி சிறு பதிவு .....
இந்திய எல்லையை கடந்து தன் தங்க தலைவரை பார்க்க சீனா எல்லை சென்றார் .தன் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பார்த்துவிட்டு கேரளா வழியாக இந்தியாவிற்கு நுழைந்தார் .
தன் ஆன்மீகத்தை தெளிவுபடுத்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திரகிரி மலை தொடருக்கு வந்தார்.அம்மலை இமயமலையில் உருவாகி திருநெல்வேலியில் முடிவடைகிறது .
அதுதான் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும்.கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமான் ஜடாமுடியே மேற்கு தொடர்ச்சி மலையாகும்.தன் ஆன்மிகத்தை உறுதி படுத்த சரியான இடம் மகேந்திரகிரி மலைதான் என்பதை உணர்ந்த
தேவர் அம்மலைக்கு வந்தடைந்தார்.
அவருடன் வள்ளியூர் ஜி எம் மகா கணபதி தேவர் அவர்களும் வந்தனர் தன் இஷ்ட தெய்வமான.அங்கே இருக்கும் முருகப்பெருமானை மன முருகவழிபட்டு மலையின் அடிவாரத்தை தொட்டு வணங்கி அந்த கானகத்தாயின் மடியினிலே தஞ்சம் புகுந்தனர்.இருவரையும் யாரும் கண்களுக்கு படாமல் அந்த தாய் மறைத்து கொண்டாள்.
தன்ஆறு மாத கடும் தவத்தினால் முக்காலத்தையும் உணரும் சக்தி படைத்தார் .அகிலத்தில் நடப்பது அனைத்தும் அவருக்கு புலப்பட்டது .அங்கேதான் அவரை லட்சோப லட்சம் மக்கள் வழிபடபோகும் உருவத்தை மாற்றினார்.
மீசையை எடுத்து நீண்ட முடிவளர்த்து மானிடராக உள்ளே நுழைந்த அவர் மிகப்பெரிய மகானாக வெளியே வந்தார் .அன்று முதல் மக்கள் அவரை இவர் ஒரு தெய்வீக பிறவி என்றனர் .
பொள்ளாச்சியில் ஒரு ஆன்மீக சொற்பொழிவு ஆற்ற வந்த தேவர் மேடையில் ஏறி பேச ஆரம்பித்தார் .அப்போது கூட்டத்திற்கு மத்தியில் ஓரே கூச்சல் குழப்பங்கள் .கூட்டத்தில் ஒரு பாம்பு உள்ளே நுழைந்தது .அப்போது தேவர் ஐயா பேசுகிறார் யாரும்பயப்பிட வேண்டாம் .தன் பேச்சை கேட்க அந்த பரமாத்மாவே ஆதிசேஷியனாகவே வந்துள்ளார் அவருக்கு வழி விடுங்கள் தன் பேச்சை கேட்டு முடித்தவுடன் அவரே சென்று விடுவார் என்றார்.....
அவ்வளவுதான் கூட்டம் பாம்புக்கு வழிவிட்டது மேடையருகே வந்துநின்றது.கூட்டம் முடிந்தவுடன் அமைதியாக சென்று அந்த பாம்பு மறைந்தது.அன்று கொங்கு மண்டலமே இதை பரபரப்புடனும் வியப்புடனும் பேசிக்கொண்டது....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக