நெல்லையப்பர் கோயில் கொடிமரத்திற்காக மரம் வெட்ட பொதிகை மலைக்கு போனவங்க விபரம் தெரியாம, சங்கிலி பூதத்தார் இருந்த பிரம்மாண்ட மரத்தை வெட்டி சாய்ச்சுட்டாங்க…. அந்த காலத்துல என்ன இப்போ மாதிரி லாரி,டிரெயிலரா உண்டு….. வெட்டின மரத்துல 'நெல்லையப்பர் கோயில் கொடிமரம்'ன்னு குறிப்பு எழுதி தாமிரபரணி ஆத்துல தள்ளிவிட்டுட்டு எல்லோரும் திரும்பி வந்துட்டாங்க… மழை பெஞ்சு தாமிரபரணி ஆத்து வெள்ளத்துல மிதந்து வந்த மரம் திருநெல்வேலி சேந்திமங்கலம் (மணிமூர்த்திஸ்வரம் ) பக்கத்துல கரை ஒதுங்கிட்டு. குறிப்பு பார்த்த ஊர்மக்கள் கோயிலுக்கு தகவல் சொல்லி விட கோயில்ல இருந்து 50.60 மாடு கட்டுன பெரிய வண்டியோட வந்து மரத்தை ஏத்தி கொண்டு போனாங்க….
டவுண் நெல்லையப்பர் கோயில் தெப்பக்குளம் வரை போன வண்டி அதுக்கு மேல நவுர மாட்டேன்கிது… 100 குதிரையை கட்டி இழுங்காங்க… 50 யானையை கொண்டு இழுக்காங்க… வண்டி அசையக்கூட இல்லை…. இது என்னடா சோதனைன்னு எல்லாரும் முழிச்சுகிட்டு இருக்கும் போது ஒரு வயசான ஆளு மேல சங்கிலி பூதத்தார் சாமி வந்து ‘ நான் இருந்த மரத்தை வெட்டி கொண்டு வந்துட்டியளேடா’ ன்னு குதிச்சு, குதிச்சு ஆடுதாரு. ‘ சரி.. நடந்தது நடந்து போச்சு..என்ன பரிகாரம் பண்ணனும்’ன்னு கோயில் நிர்வாகத்தார் கேட்க, ‘கோயிலைச் சுத்தி 21 நிலையம் வச்சு வருஷம் தவறாம கொடையும் விட்டு கொடுக்கணும்’ன்னு சத்தியம் வாங்கின பிறகுதான் வண்டி நவுண்டுச்சாம்…கொடி மரமும் கோயில் போய் சேர்ந்துச்சாம்…
திருநெல்வேலி டவுணுக்கு எப்போ போனாலும் பாருங்க… தெப்பக்குளம் கரையில ரோட்டுப்பக்கமா 'முத்து மண்டபம்'ன்னு பூதத்தாருக்கு முதல் நிலையமும், அப்படியே நெல்லையப்பர் கோயில் கோட்டைச்சுவரை சுற்றி எல்லா ரத வீதியிலயும் மத்த கோயில்களும் இருக்கு… இப்படித்தான் அந்த இடத்துக்கு ‘பூதத்தான் முக்கு’ன்னும் பேரு வந்துச்சு. வருஷாவருஷம் கொடையும், பூக்குழி இறங்குறதும் ரொம்ப விஷேசமா நடந்துகிட்டு இருக்கு…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக