சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ள அருள்மிகு பிரம்மராட்சசி மகாசூரவர்த்தினியின் அவதாரம். இந்த அம்பாளுக்கு அடிமையாய் இருப்பவர்கள் திருநெல்வேலி நகரில் இருந்து வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பொதுமக்களுக்கு அருள் வாக்கு அளித்து வருகிறார்கள். அதே போல சில பக்தர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல ஊர்களில் அம்பாளுக்கு நிலையம் விட்டு கொடுத்ததுடன் அருள் வாக்கும் சொல்லி வருகிறார்கள்.
தற்போது பிரம்மராட்சசி அம்மன் மூலம் பயன் பெற்றவர்களை கீழ்கண்டவாறு பட்டியலிடுகிறார் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி. இவரின் காலஞ்சென்ற மைத்துனர் முகவை மன்னர் இராமநாத சேதுபதி அவர்களுக்கு மணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாமையால் அம்பாளுடைய கடாட்சத்தால் 1967-ல் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்தவுடன் வயிற்றோட்டம் மூலம் மோசமான நிலையில் இருந்த போது, ஜமீனின் இளைய தாயார் கணேச குஞ்சரி நாச்சியார் ஓடிச் சென்று அந்த குழந்தைக்கு பிரம்ம நாயகி என்று பெயர் சூட்டி பிரம்ம ராஜேஸ்வரி என்று கூறி நெற்றியில் குங்குமத்தை இட்டதும், வயிற்றோட்டம் நின்றுவிட்டது.
அந்த பெண் குழந்தைக்கு தற்சமயம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘பிரம்ம அபர்ணா’ என்று பெயர் வைத்துள்ளனர். பிரம்ம அபர்ணா சிறிய தந்தைக்கும் அம்பாளின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. ஜமீனின் சிறிய தாயாருக்கும் மூன்று தடவை குறை பிரசவம் ஏற் பட்டது. அப்போது அம்பாளை நோக்கி நேமிதம் இருந்தனர். அதன்பின் அவருக்கு மகப்பேறு பெற்று அக் குழந்தைக்கு பிரம்ம ரெகுராஜ் என்று பெயரிட்டனர். அவர் தற்சமயம் வெளிநாட்டில் தொழில் நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிறகு பிறந்த எட்டு குழந்தைகளுக்குமே பிரம்ம என பெயர் தொடங்கும் வகையில் பெயரிட்டு உள்ளார்கள்.
இதே போல் ஜமீனின் குடும்பத்துடன் நெருங்கி பழக்கம் கொண்ட திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் அம்பாளுடைய கடாட்சத்தினால் மகப்பேறு அடைந்து குழந்தைகளுக்கு இந்த அம்மனின் பெயரை வைத்துள்ளனர். வேண்டுதல் - கோவிலுக்கு வந்து சுவாமிக்கு நேமிதம் செலுத்த வரும் பக்தர்களின் வசதிக்காக எந்த காலமும் இரண்டு பூசாரிகளும் உள்ளனர். தினமும் மூன்று வேளை பூஜை நடத்தப்படுகிறது. மற்றும் காது குத்துதல், முடி எடுக்கும் நேமிதத்துக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.
இங்கு சமையல் பாத்திரங்களும் தங்கும் விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வசதியை செய்து தர அலுவலகத்தில் எப்போதும் அலுவலர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். தற்சமயம் இக்கோவில் கண்காணிப்பாளராக ராட்சமுத்து என்பவரும், பட்டவராயன் கோவில் பூசாரியாக இசக்கியப்பனும், அய்யனார் கோவில் பூசாரியாக பிச்சையா என்பவரும் உள்ளனர். சொரிமுத்து அய்யனாரை தரிசனம் செய்ய பஞ்சாச் சரத்தில் (பஞ்ச -அட்சரம்) ஸ்தோத்திரம் என்ற பாடல் ஐந்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக