வியாழன், 15 ஜூன், 2017

இண்டெர்நெட் யுகத்தில் சிங்கம்பட்டி மறவர் சமூகத்தார் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்ட மறந்த குலதெய்வத்தின் பெயர்கள்.....

சிவபெருமானின் பூதகணங்களுக்கு

எல்லாம் ராஜாவாகிய....

"பூதராஜா "சங்கிலி பூதத்தார் சுவாமியின்

பெயரினை அவரது பக்தர்களின்

குடும்பத்தில் வாரிசாக வரும்

ஆண் பிள்ளைகளுக்கு

"பூதராஜா’"

"பூதராசு

"பூதத்தான்"

"பூதப்பாண்டியன்"

"பூதலிங்கம்"

பெண்பிள்ளைகளுக்கு

"பூதம்மாள்"

என்றே சூட்டிவந்தார்கள்....

தற்போதைய நவீன காலத்திற்கேற்றார் போல் ‘பூதராஜா’வை சுருக்கி ‘பூஜா’ என்றும் பெயர் சூட்டி வருகிறார்கள்.....

வளர்ந்து வரும் நாகரீக உலகத்தில் குலதெய்வங்கள் பெயரை குழந்தைகளுக்கு வைப்பதையே கவுரவ குறைச்சலாக நினைத்துவிட்டார்கள் ......

திங்கள், 12 ஜூன், 2017

திரை உலகத்தினரின் வேண்டுதலை கொடுத்த பிரம்மராட்சசி

சொரிமுத்து அய்யனார் கோவிலில் உள்ள அருள்மிகு பிரம்மராட்சசி மகாசூரவர்த்தினியின் அவதாரம். இந்த அம்பாளுக்கு அடிமையாய் இருப்பவர்கள் திருநெல்வேலி நகரில் இருந்து வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பொதுமக்களுக்கு அருள் வாக்கு அளித்து வருகிறார்கள். அதே போல சில பக்தர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல ஊர்களில் அம்பாளுக்கு நிலையம் விட்டு கொடுத்ததுடன் அருள் வாக்கும் சொல்லி வருகிறார்கள்.

தற்போது பிரம்மராட்சசி அம்மன் மூலம் பயன் பெற்றவர்களை கீழ்கண்டவாறு பட்டியலிடுகிறார் ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி. இவரின் காலஞ்சென்ற மைத்துனர் முகவை மன்னர் இராமநாத சேதுபதி அவர்களுக்கு மணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பேறு இல்லாமையால் அம்பாளுடைய கடாட்சத்தால் 1967-ல் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்தவுடன் வயிற்றோட்டம் மூலம் மோசமான நிலையில் இருந்த போது, ஜமீனின் இளைய தாயார் கணேச குஞ்சரி நாச்சியார் ஓடிச் சென்று அந்த குழந்தைக்கு பிரம்ம நாயகி என்று பெயர் சூட்டி பிரம்ம ராஜேஸ்வரி என்று கூறி நெற்றியில் குங்குமத்தை இட்டதும், வயிற்றோட்டம் நின்றுவிட்டது.

அந்த பெண் குழந்தைக்கு தற்சமயம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘பிரம்ம அபர்ணா’ என்று பெயர் வைத்துள்ளனர். பிரம்ம அபர்ணா சிறிய தந்தைக்கும் அம்பாளின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. ஜமீனின் சிறிய தாயாருக்கும் மூன்று தடவை குறை பிரசவம் ஏற் பட்டது. அப்போது அம்பாளை நோக்கி நேமிதம் இருந்தனர். அதன்பின் அவருக்கு மகப்பேறு பெற்று அக் குழந்தைக்கு பிரம்ம ரெகுராஜ் என்று பெயரிட்டனர். அவர் தற்சமயம் வெளிநாட்டில் தொழில் நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிறகு பிறந்த எட்டு குழந்தைகளுக்குமே பிரம்ம என பெயர் தொடங்கும் வகையில் பெயரிட்டு உள்ளார்கள்.

இதே போல் ஜமீனின் குடும்பத்துடன் நெருங்கி பழக்கம் கொண்ட திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் அம்பாளுடைய கடாட்சத்தினால் மகப்பேறு அடைந்து குழந்தைகளுக்கு இந்த அம்மனின் பெயரை வைத்துள்ளனர். வேண்டுதல் - கோவிலுக்கு வந்து சுவாமிக்கு நேமிதம் செலுத்த வரும் பக்தர்களின் வசதிக்காக எந்த காலமும் இரண்டு பூசாரிகளும் உள்ளனர். தினமும் மூன்று வேளை பூஜை நடத்தப்படுகிறது. மற்றும் காது குத்துதல், முடி எடுக்கும் நேமிதத்துக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.

இங்கு சமையல் பாத்திரங்களும் தங்கும் விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வசதியை செய்து தர அலுவலகத்தில் எப்போதும் அலுவலர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். தற்சமயம் இக்கோவில் கண்காணிப்பாளராக ராட்சமுத்து என்பவரும், பட்டவராயன் கோவில் பூசாரியாக இசக்கியப்பனும், அய்யனார் கோவில் பூசாரியாக பிச்சையா என்பவரும் உள்ளனர். சொரிமுத்து அய்யனாரை தரிசனம் செய்ய பஞ்சாச் சரத்தில் (பஞ்ச -அட்சரம்) ஸ்தோத்திரம் என்ற பாடல் ஐந்து உள்ளது.

தீர்த்த கட்ட விபரங்கள்

பூர்வவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் ஊர்ஜஸ்தீர்த்தம், இஷர்தீர்த்தம், விருஷர்ங்கதீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், சக்கரதீர்த்தம், பாண தீர்த்தம் ஆகியவை உள்ளது. உத்திரவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் வாமன தீர்த்தம், ரேம்ப தீர்த்தம், நரசிங்க தீர்த்தம், போகி ராஜ தீர்த்தம் உள்பட பல தீர்த்தம் உள்ளது. பாண தீர்த்தம், பாஞ்சஜன்ய தீர்த்தம். வராக தீர்த்தம், சக்கரசீலா தீர்த்தம், முனிதீர்த்தம், பிசங்கிலா தீர்த்தம், கன்னியாதீர்த்தம், வருணாதீர்த்தம், ராமதீர்த்தம், காலதீர்த்தம் இத்தகைய தீர்த்தங்களும் தாமிரபரணி நதி உற்பத்தி ஸ்தானத்தில் இருந்து கல்யாணதீர்த்தம் வரை உள்ளது.

கல்யாண தீர்த்தம், நாரத தீர்த்தம், வருண தீர்த்தம் (அகத்தியர் அருவி), பிராசேதல தீர்த்தம், தும்புரு தீர்த்தம், பருவத்தீர்த்தம், பாபநாசத்தில் இந்திரசீல தீர்த்தம், திரிநதிசங்கம தீர்த்தம், தீப தீர்த்தம், சாலா தீர்த்தம், அம்பாசமுத்திரத்தில் காசிப தீர்த்தம், கண்ணுவ தீர்த்தம், கல்லிடைகுறிச்சியில் பிருகு தீர்த்தம் ஆகியவையும் மிக முக்கியவையாகும்.

உத்திரவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் கோட்டீஸ்வர தீர்த்தம் (ஊர்க்காடு), சக்கர தீர்த்தம், மாண்டக தீர்த்தம்,திருப்புடைமருதூரில் கடனா சங்கம தீர்த்தம், மானவ தீர்த்தம், சுரேந்திர மோட்ச தீர்த்தம், பைசாசமோசன தீர்த்தம், தர்மதர தீர்த்தம், தண்டபிரம்மசாரி தீர்த்தம், கரும தீர்த்தம், அத்தாளநல்லூரில் கஜேந்திரா மோட்ச தீர்த்தம், புஷபவனேச தீர்த்தம், மணிக்கீரிவ தீர்த்தம், அரிய நாயகிபுரத்தில் யட்ச தீர்த்தம், கோ தீர்த்தம், சோம தீர்த்தம் சேரன்மகாதேவியில் வியாச தீர்த்தம், மார்கண்டேய தீர்த்தம், ரோமச தீர்த்தம்,(கோடகநல்லூர்), துருவாச தீர்த்தம், பார்கவ தீர்த்தம்(கரிசூழ்ந்த மங்களம்), வைனதேய தீர்த்தம், சாயா தீர்த்தம், காந்தர்வ தீர்த்தம், பானு தீர்த்தம், பிரபா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம் (செவல்), யாக தீர்த்தம், ருத்ர தீர்த்தம், புஷப தீர்த்தம் (சிந்துபூந்துறை), ரிஷி தீர்த்தம், மூர்த்தீஸ்வரன தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தயா தீர்த்தம், புசங்க மோகன தீர்த்தம், சுசி தீர்த்தம், சிங்க தீர்த்தம், கேது தீர்த்தம், உஷர் தீர்த்தம், இவைகள் எல்லாம் தருவை அருகில் உள்ளன.

வடகரையில் ராமா தீர்த்தம், ஜடாயு தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம், ஆகியவை திருவண்ணநாதபுரம் மற்றும் அருகன்குளம் அருகில் உள்ளன. பாவ விமோட்சன தீர்த்தம், பட்ஷி தீர்த்தம், அட்சுரு தீர்த்தம், காசி தீர்த்தம், நதி ஸ்தம்பன தீர்த்தம், பூசாவதன தீர்த்தம் (செப்பரை), துரிதாபக தீர்த்தம், மங்கள தீர்த்தம் (பாலாமடை), லோகிவாச தீர்த்தம் ஆகியவையும் உத்திரவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் உள்ளது.

புதன், 7 ஜூன், 2017

அஷ்ட சாஸ்தாக்கள்


ஆதிபூத நாதர்,

கல்யாண வரதர்,

மஹா சாஸ்தா,

சம்மோஹன சாஸ்தா,

சந்தான பிராப்தி சாஸ்தா,

வீர சாஸ்தா,

ஞான சாஸ்தா,

வேத சாஸ்தா......

ஞாயிறு, 4 ஜூன், 2017

கொடிமரம் தூக்கிய மறவர்கள்

சிங்கம்பட்டி ஜமீன்கள் மிகுந்த தெய்வபக்தி கொண்டவர்கள் ...

தென்பகுதியில் உள்ள பல சிவன் ஆலயங்களுக்கு அவர்களுக்கு சொந்தமான காரையார் பகுதியில் இருந்து கோவில் கொடிமரத்திற்கு தேவையான மரங்களை உடல் பலம் வாய்ந்த தங்கள் ஜமீன் மறவர்கள் மூலமாகவே அனுப்பினார்கள் ...

அதில் ஒன்று தான் புகழ் பெற்ற ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் ஆலயம்

சிறுதாலி கட்டி மறவர்களின் திருவிழா விவரங்கள்

குலதெய்வங்கள் மற்றும் காவல் தெய்வங்கள் -பரிவார தெய்வங்கள் வரிசை

1100 ஆண்டுகள் பழமைவாய்ந்த நமது சமூகம் வணங்கிய சிறுதெய்வங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள்

குலதெய்வம் : தர்மசாஸ்தா சொரிமுத்து அய்யனார்

காவல் தெய்வம் : சங்கிலி பூதத்தார்

பரிவார தெய்வங்கள் :

சமேத பட்டவராயர்

பிரம்ம ராக்ஷி அம்மன்

பேச்சி அம்மன்

பத்திர காளி

பூதம் பெரும் படையான்

பெரிய வாசல் பூதம்

கருப்பன்

கருப்பி

பொம்மக்கா

திம்மக்கா

அகத்திய முனி

கும்பா முனி

பாதாள முனி

ஜோதி ருத்திரன் (சுடலை மாடன் )

தளவாய் மாடன்

தூண்டில் மாடன்

தூசி மாடன்

கரடி மாடன்

புலிமாடன்

லாட சன்னாசி

பலவேசமுத்து

மாசான முத்து

பலவேசகரன் சுவாமி

பத்மாப் பரம ஈஸ்வரன்

முத்து சுவாமி

பூல் மாடன்

முண்ட மாடன்

இருளப்ப சாமி

இசக்கி மாடன்

மகாராஜா

முண்டன் சாமி

வெள்ளைப் பாண்டி

காளைமாடசாமி

பொன்மாடசாமி

சிவனைந்த பெருமாள்

தேரடி மாடன்

ஐகோர்ட் மகாராஜா

பூக்குழி மாடன்

சங்கிலி மாடன்

ஆகாச மாடன்

உதிர மாடன்

சொரிமுத்து அய்யனார் கோவில் ஸ்தல வரலாறு

இன்னல்களை தீர்க்கும் சொரிமுத்து அய்யனார் கோவில்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தின் வரலாற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் சொரிமுத்து அய்யனார். இறைவியர் புஷ்கலை, பூர்ணகலை. தல விருட்சம் இலுப்பை மரம் ஆகும். இங்கு பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன.

இந்த ஆலயமானது, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள், பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட, தாமிரபரணி சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் இயற்கையின் மையத்தே அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கொடிய விலங்குகள் பல வசித்து வந்தாலும், இத்தலத்து பகவானின் அருளால் அவைகள் பக்தர்களுக்கு எந்த வித தொல்லையும் கொடுப்பதில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

தல வரலாறு:

இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

தென்னாட்டில் பண்டைய காலத்தில் பண்டமாற்று வணிகமுறை நடைமுறையில் இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்து உள்ள இடத்திற்கு அருகில், பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது. அப்போது பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகியது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு அதிசயித்து பார்த்தனர்.

அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. ‘குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இனி வரும் காலங்களில் மகாலிங்க சுவாமியை, சொரிமுத்தைய்யன், சங்கிலிமாடன், பிரம்மரட்சகி போன்ற மூர்த்திகள் சூழ ஆலயம் எழுப்பி வழிபட்டு வாருங்கள்’ என்றது அந்தக் குரல். அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பல சன்னிதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர்.

இமயமலையில் பரமேஸ்வரனுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இந்த தெய்வீக காட்சியைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வடதிசை நோக்கி பயணப்பட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகை சமநிலை அடையச் செய்வதற்காக, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்தார். ‘அகத்தியனே! நீ தென்திசை நோக்கிச் செல். உன்னால் தான் இந்த உலகை சமநிலை பெறச் செய்ய முடியும்’ என்றார்.

இறைவனின் ஆணைப்படி நடக்க சித்தம் கொண்ட அகத்தியர், தென்திசை நோக்கி பயணித்து பொதிகை மலையை வந்தடைந்தார். அங்கு தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்திருக்கும் இடத்தில் நீராடி, தனது நித்திய காரியங்களை முடித்துக் கொண்டு யோக நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது ஜோதி ஒன்று அவரது மனக்கண்ணில் தோன்றியது. அதைக் கண்டு அதிசயித்த அகத்தியர், அந்த ஜோதியை யார் என்று அறிய ஞான திருஷ்டியால் பார்த்தார்.

அப்போது சாஸ்தாவானவர், சொரிமுத்து அய்யனாராக, மகாலிங்க பெருமானை பூஜிக்கும் காட்சி அவருக்கு தெரிந்தது. சொரிமுத்து அய்யனாருடன், பேச்சியம்மன், பிரம்மரட்சகி ஆகியோரும் மகாலிங்க சுவாமியை வழிபட்டனர்.

இதுகண்டு அகத்திய முனிவர் ஆனந்தம் அடைந்தார். பின்னர் மலர் தூவி ‘இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆக வேண்டும்’ என்றும், ‘பக்தர்கள் தனது மக்களுடன் வழி, வழியாய் எல்லாப்பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வரம் தர வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டார்.

அப்போது சாஸ்தாவானவர் ‘மலர் சொரிமுத்தய்யனார்’ என்று பெயர் தாங்கி, மகாலிங்கேசுவரர், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசி பூதத்தார், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பேச்சியம்மன், தூண்டில் மாடன், ஜோதிருத்திரன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் ஒருசேர காட்சி கொடுத்து மறைந்தார். அன்று தொடங்கி இத்தலத்தில் மேற்சொன்ன அனைத்து தெய்வங்களுக்கும் சன்னிதி ஏற்படுத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.

ஒரு சமயம் இப்பகுதியில் வற்கடம்(12 ஆண்டுகளுக்கு மழையின்மை) ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர் ‘ஆடி அமாவாசையன்று, இந்தத் திருத்தலத்தில் உள்ள சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும்; வறட்சி நீங்கும்’ என்று கூறினார். அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ய வறட்சி நீங்கியது. மழையை பொழிய வைத்த அய்யனார், ‘சொரிமுத்து அய்யனார்’ என அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.

முத்துப்பட்டன் என்ற பிராமண இளைஞன், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பொம்மக்கா, திம்மக்கா ஆகிய சகோதரிகளை மணம் புரிந்து கொண்டு செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தான். ஒருசமயம் பசுக்களை பாதுகாக்க போரிடும்போது முத்துப்பட்டன் வீரமரணம் அடைந்தான். பட்டவராயன் என்றழைக்கப்பட்ட அவருக்கும், இத்தலத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங் களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து மாலை அணிவிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இக்கோவிலில் தினசரி காலை 6 மணி அளவிலும், மாலை 5.30 மணி அளவிலும் பூஜைகள் நடைபெறுகிறது.

நெல்லைக்கு மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக செல்லும் பாதையில் நெல்லையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து இக்கோவிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஆடி அமாவாசை திருவிழா :

அகத்திய முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை ஆகும். எனவே இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர். இத்திருத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவானது நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட திருவிழா ஆகும். இதேபோல் தை, மாசி மாத அமாவாசை தினங்களும் விசேஷமான நாட்களாகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்ததார் கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது.

செருப்பு காணிக்கை:

குல தெய்வம் தெரியாதவர்கள் இவரையே(சொரிமுத்து அய்யனார்) குலதெய்வமாக வழிபடலாம் என்ற சிறப்புடையது இக்கோவில். இத்திருத்தலத்தில் உள்ள பட்டவராயர் சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முதல் ஆண்டு இங்கு கட்டப்படும் செருப்புகளை மறு ஆண்டு இக்கோவிலுக்கு வந்து பார்த்தால் அந்த செருப்புகள் தேய்ந்திருப்பதை காணமுடியும். பக்தர்கள் இத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது.

மணி விழுங்கி மரம் :

இத்திருக்கோவில் வளாகத்தில் இலுப்பை மரம் ஒன்று உள்ளது. பக்தர்களின் வேண்டுதலின்படி இந்த மரத்தில் கட்டப்படும் மணிகள் மரத்தின் உள்ளே பதிந்து விடுவதால் இந்த மரம் மணி விழுங்கி மரம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கைகளை இறைவன் இதன் மூலம் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது...

வியாழன், 1 ஜூன், 2017

தென்னகத்து சிங்கம்பட்டி மறவர்கள்

சென்ற வருடம் சிங்கம்பட்டி மறவர் சமூகத்தவரின் குலதெய்வங்கள் வரிசை வெளியிடப்பட்டது ...இந்த வருடம் தென்பகுதியில் நமது சமூகம் வாழும் ஊர்களின் பெயர்கள் சிங்கம்பட்டி ஜமீன் மறவர் உறவின் முறை பக்கத்தின் சார்பாக வெளியிடப்படுகிறது .... 1.அம்பாசமுத்திரம் (வீரம் விளைந்த விளாகம்) 2.மேல அம்பாசமுத்திரம் 3.சாட்ட பத்து 4.காக்கநல்லூர் 5.கோவில்குளம் 6.நாச்சியார் குளம் 7.பட்டமுத்து 8.கண்டியார்குளம் 9.மூலச்சி 9.கிராங்கிகுளம் 10.பாறைக்குளம் 11.உப்புவாணியன் முத்து 12.அணைந்தநாடார் பட்டி 13.ராவுத்தர் பேரி 14.ஐந்தாம் கட்டளை 15.சொக்கநாதன் பட்டி 16.அயன் சிங்கம்பட்டி (வீரம் விளைந்த விளாகம்) 17.அடைச்சாணி 18.அதழநல்லூர் 19.அயன் திருவாலீஸ்வரம் 20.பிரம்மதேசம் (வீரம் விளைந்த விளாகம்) 21.தர்மபுரமடம் 22.ஏகம்பராபுரம் 23.கீழ் ஏர்ம்மாள்புரம் 24.சுண்ட மங்கலம் 25.சாம்பவர் வடகரை 26.கோவிந்தப்பேரி (வைணவ சித்தாந்தம்) 27.ஹரிகேசவநல்லூர் 28.இடைக்கல் 29.கடையம் பெரும்பட்டு 30.கரிசல் பட்டி 31.காசித்தர்மம் 32.கோடரங்குளம்(வீரம் விளைந்த விளாகம்) 33.கீழ கடையம் 34.குனியூர் 35.மலையன்குளம் 36.மன்னார்கோவில் 37.மேலநீலிதநல்லூர் 38.பாவூர் சத்திரம் 39.சேரன்மாதேவி 40.பாபநாசம் 41.பாப்பாக்குடி 42.பாப்பான்குளம் 43.ரவணசமுத்திரம் 44.ரெங்க சமுத்திரம் 45.தெற்கு திருப்புவனம் 46.தெற்கு அரியநாயகிபுரம் 47.தெற்கு கடையம் 48.தெற்கு கல்லிடைக்குறிச்சி 49.தெற்கு வீரவநல்லூர் 50.தெற்கு மாடத்தூர் 51.உதயமார்த்தாண்டபுரம் 52.வாகைக்குளம் 53.வைராவிக்குளம் 54.வீரசமுத்திரம் 55.தேவநல்லூர் {வைணவ சித்தாந்தம்} 56.பத்மநேரி{ வைணவ சித்தாந்தம்} 57.கரந்தனேரி 58.இட்டமொழி 59.மலையடிப்புதூர் (வைணவ சித்தாந்தம்) 60.திருக்குறுங்குடி (வைணவ சித்தாந்தம்) 61.பத்தை(வைணவ சித்தாந்தம் ) 62.சிங்கிகுளம் (வைணவ சித்தாந்தம்) 63.கூந்தன்குளம் 64.கீழ கருவேலங்குளம் 65.மேலவடக்கரை (வைணவ சித்தாந்தம்) 66.படலையார் குளம் 67.களக்காடு 68.மூன்றடைப்பு 69.பத்தமடை 70.முனைஞ்சிப்பட்டி 71.சிறுமளஞ்சி 72.பெருமளஞ்சி 73.பணகுடி 74.பாம்பன்குளம் 75.ராதாபுரம் தெற்கு {வரகுண பாண்டியன் வம்சம் } 76.உதயத்தூர்(வீரம் விளைந்த விளாகம்) 77.தனக்கர் குளம் {பெரிய பண்ணை @சின்ன பண்ணை வகையாறா } 78.வள்ளியூர் {வடக்கு &தெற்கு} 79.குமாரபுரம் 80.தோவாளை (வீரம் விளைந்த விளாகம்) 81.பழவூர் (வீரம் விளைந்த விளாகம்) 82.இருக்கன்துறை 83.தெற்கு கருங்குளம் (வீரம் விளைந்த விளாகம்) 84. பிராந்தனேரி 85.மேல கொட்டாரம் 86.உருமன் குளம் 87.கோட்டையன்கருங்குளம் 88.சௌந்திரபாண்டியபுரம் 89.கும்பிகுளம் 90.இளைய நயினார் குளம் 91.பார்க்கனேரி கீழூர் 92.விஜயாபதி 93.விஸ்வநாதபுரம் 94.கலைஞர் குடியிருப்பு 95.அஞ்சுகிராமம் 96.கன்னியாகுமரி -மறக்குடி 97.அகத்தீஸ்வரம் 98.சுசீந்திரம் 99.மகாராஜபுரம் 100.தேரூர் -புதுக்கிராமம் {பட்டம் வன்னியத்தேவர் } 101.கோட்டார் 102.நாகர்கோவில் 103.தடியநாயக்கன் கோணம் 104.அழகியபாண்டியபுரம் 105.கடுக்கரை 106.பூதப்பாண்டி 107.முப்பந்தல் 108.காவல் கிணறு 109.ஆரல்வாய்மொழி 110.கோலியன்குளம்
111.கால்க்கரை
112.பிராஞ்சேரி
113.திருப்பதிசாரம்
விளாத்திகுளம் {தூத்துக்குடி மாவட்டம்} மேலமாந்தை{ராமநாதபுரம் மாவட்டம்}