சனி, 10 பிப்ரவரி, 2018

61மாடன்கள்

அறுபத்தோரு மாடன்கள் பிறப்பு
பூலோகத்தில் மீண்டும் மந்திர சக்தியின் ஆதிக்கம் மேலோங்கியது. இதை கவனித்த தேவர்கள் பிரம்மனிடமும், மகாவிஷ்ணுவிடமும் முறையிட்டனர்.

அவர்கள் சிவனிடம் கூறினர். ‘‘சுவாமி, பூலோகத்தில் துர் மரணம் அடைந்தவர்களின் துஷ்ட ஆவிகள் ஆதிக்கம் செலுத்துகிறது. அதுமட்டுமன்றி மீண்டும் மந்திர சக்தி மேலோங்குகிறது. இதை உடனே தடுக்காவிட்டால் படைத்த உயிர்களை எப்படி காப்பது?’’ என்று கேட்டபோது, ‘மாந்த்ரீக சக்திகளுக்கு முடிவு கட்டவும், துஷ்ட ஆவிகளின் கொட்டம் அடக்கவும், விரைவாக தீர்வு காண்போம்’ என்று கூறிய சிவன், மந்திர மூர்த்தியாக அவதாரம் எடுக்க முடிவு செய்தார். அதன் காரணமாக சிவன் 61 மாடன்களையும், மாடத்திகளையும் உருவாக்கினார்.

அவர்கள் தான் சிவனின் இயக்கியர்களாக (சேவர்களாக) செயல்பட்டனர். அவர்களே சிறு தெய்வங்களில்
முதன்மையானவர்களாக திகழ்ந்தனர்.

61 மாடன்கள்

1. அருவாமாடன்,

2. அத்திமாடன்,

3. அகழிமாடன்,

4. அக்னி மாடன்,

5. அடுப்படிமாடன்,

6. அன்னமாடன்,

7. அரிமுத்து மாடன்,

8. அரகுலமாடன்,

9. அரையடிமாடன்,

10. அரசடி மாடன்,

11.ஆண்டிமாடன்,

12. ஆவேசமாடன்,

13. ஆகாச மாடன்,

14. ஆலடிமாடன்,

15. இசக்கிமாடன்,

16. ஈனமாடன்,

17. ஈனமுத்துமாடன்,

18. உடுக்கைமாடன்,

19. உறிமாடன்,

20. உதிரமாடன்,

21. ஊசிக்காட்டுமாடன்

, 22. எசமாடன்,

23. ஏறுமாடன்,

24. ஒளிமுத்துமாடன்,

25. ஒய்யாரமாடன்,

26. ஓங்காரமாடன்,

27. கசமாடன்,

28. கரடிமாடன்,

29. சக்தி மாடன்,

30. சிவமாடன்,

31. பன்றிமாடன்,

32. பரன்மாடன்,

33. படித்துறைமாடன்,

34. தேரடிமாடன்,

35. குளக்கரை மாடன்,

36. கிணத்தடிமாடன்,

37. வேம்படிமாடன்,

38. பனையடிமாடன்,

39. மடையடிமாடன்,

40. கரையடிமாடன்,

41. செக்கடிமாடன்,

42. தெப்பக்குளத்துமாடன்,

43. வயக்கரை மாடன்,

44. வாழைமரத்தடிமாடன்

, 45. சுடுகாட்டுமாடன்,

46. நல்லமாடன்,

47. நடுக்காட்டுமாடன்,

48. வண்டிமாடன்,

49. முச்சந்திமாடன்,

50. சந்தையடிமாடன்,

51. வண்ணாரமாடன்

52. வெள்ளாவிமாடன்,

53. அணைக்கரைமாடன்,

54. சப்பாணிமாடன்,

55. கொம்புமாடன்,

56. கொடிமரத்து மாடன்,

57. தூசிமுத்துமாடன்,

58. குதிரமாடன்,

59. பிச்சிப்பூ மாடன்,

60. பூக்குழிமாடன்.

61. பேச்சி மாடன்

       என 61 மாடன்கள் பிறவி எடுக்கச் செய்தார் சிவன். தளவாய் மாடன், புல மாடன் இந்த இருவரும் 61 மாடன்களில் இல்லை. தக்கராஜன் தளவாய் மாடனாகவும், புலையன் மகன் புல மாடனாகவும் வணங்கப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக