தென்னாட்டு புலி நல்லக்குட்டி தேவர்
சிங்கம்பட்டி மறவர் சமுதாயம் இக்காலத்தில் படிக்கவேண்டிய உண்மையான
வீரவரலாற்று பதிவு
தீவிர படை திரட்டி தலைமை ஏற்று வரும்
"மார்த்தாண்ட வர்மர்" யார்?
தங்களால் சிறுவயதில் அடித்து விரட்டப்பட்டவன்....
அகதியாக காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்தவன். அப்படி பட்டவன் எங்கிருந்து போர் பயிற்சிகளை பெற்றிருப்பான் போர் வீயூகங்களை யாரிடம் கற்று இருப்பான்...
எதோ உந்துதலில் ஆயுதம் ஏந்தி போர் செய்ய வருகிறான் அது மட்டுமா அவனிடம் இருக்கும் படைவீரர்கள் யார் எக்காலத்திலும் ஆயுத பயிற்சி பெறாதவர்கள் ஏன் ஆயுதங்களை தொட்டு கூட பார்க்காதவர்கள்...
இவர்களை வைத்து கொண்டு சாதாரணமாக பவனி வரும் மார்த்தாண்ட வர்மர் போரில் எங்களை வெற்றி கொள்ளமுடியுமா?
இல்லை போர்க்களத்தில் சில நாழிகைகள் தான் தாக்குதான் பிடிக்கமுடியுமா?
இந்த அகம்பாவ உணர்வே அவர்களை தோற்கடிக்கும் என்பதை எதிரிகள் அப்போது உணரவில்லை....
இந்த அகம்பாவ உணர்வுடனே மார்த்தாண்ட வர்மரின் சிங்கம்பட்டி மறவர் படைகளை எட்டு வீட்டு பிள்ளைமார்களின் படைகள் எதிர் கொண்டன..
கணப்பொழுதில் வரும் படைகளை சிதறடித்து விடலாம் "என்று கனவு கண்டனர் மார்த்தாண்ட வர்மரால் இனி ஜென்மத்துக்கும் படைகள் திரட்டக்கூடாது
என்பதில் திட்டமிட்டனர்
ஆனால் போர்க்களத்தில் அவர்கள் எதிர்பாராத சம்பவங்கள் எல்லாம் அரேங்கேற தொடங்கின ...
மூர்க்கத்துடன் எட்டு வீட்டு பிள்ளைமார்களின் படைகளுக்குள் புகுந்த சிங்கம்பட்டி மறவர் படைகள் முதல் அணிவகுப்பை சிதறடித்தனர் ...
இரண்டாவது அணி சேர்வதற்கு அவர்கள் வாய்ப்பு அளிக்க வில்லை.
இதை சற்றும் எதிர்பார்க்காத எட்டுவீட்டு பிள்ளைமார்கள் தங்கள் படைகளை ஒழுங்குக்கு கொண்டுவர அரும்பாடு பட்டார்கள்..
அது முடியாமல் போக சூழலுக்கு தகுந்தவாறு போர் செய்யும்படி சமிஞ்சை செய்தார்கள் ஏன் என்றால் மோதிய சிங்கம்பட்டி மறவர் படைகள் போர் யுக்தியும் ஒரு காரணம்...
" மெல்ல மெல்ல "சம தாக்குதல் நடத்துவதை நிறுத்தி தற்காத்து கொள்ளமுயன்றார்கள் தங்களுக்கு சமமான ஆயுதங்கள் மார்த்தாண்ட வர்மரின் சிங்கம்பட்டி மறவர் படைகளுக்கு இருக்காது.. என்ற எண்ணம் அகன்று அவர்களுக்கு ஆயுதங்கள் எப்படி கிடைத்தது என்று எண்ண ஆரம்பித்துவிட்டார்கள்..
போர் தொடங்கிய உடனே வெற்றி யார்பக்கம் என்று தெள்ளத்தெளிவாக எதிரிகளுக்கு புரிந்து விட்டுவிட்டது காற்றில் பாய்ந்து வரும் அம்புகளுக்கு எதிரே வாளை சுழற்றியபடி மார்த்தாண்ட வர்மருடன் முன்னேறி கொண்டிருந்தார்
சிங்கம்பட்டி ராஜா...
எட்டு வீட்டு பிள்ளைமார் படைக்கோ அதிக சேதம் மார்த்தாண்ட வர்மரின் சிங்கம்பட்டி மறவர் படைகளுக்கோ சிராய்ப்பு தான் ..
இந்த உன்னதமான வீரவரலாறை பதிவு செய்யப்போகும் தருணத்தில் அந்த சம்பவம் நிகழ்ந்தது சிறுவனான மார்த்தாண்ட வர்மருக்கு போர் பயிற்சி அளித்து அதிக சேதத்தை ஏற்படுத்தியவர் சிங்கம்பட்டி ராஜா எந்த சிங்கம்பட்டி ராஜாவால் தங்கள் ஆட்சி போகிறதோ அந்த ராஜாவுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்கின்ற முடிவுக்கு வருகிறார்கள் ..
தீர்மானத்துக்கு வந்த எட்டுவீட்டு பிள்ளைமார்கள் கணப்பொழுதும் தாமதிக்க வில்லை ....
வில்லை எடுத்தார்கள்
நாணில் அம்பை பூட்டினார்கள்
இந்த முறை குறி மார்த்தாண்ட வர்மரின் மீது அல்ல அவருக்கு சமமாக படைகளை நடத்தி வந்துகொண்டிருந்த சிங்கம்பட்டி ராஜாவின் மூத்த மகனின் அகன்ற மார்பின் மீது...
சிங்கம்பட்டி ராஜாவின் மகன் அப்படியே தரையில் சாய்ந்தார் அம்பின் நாற்பது சதவீகிதம் மட்டும் வெளியில் இருந்தது மீதி அறுபது சதவீகிதம் உடம்பினுள் சென்று இருந்தது ....
பீறிட்ட குருதி மார்த்தாண்ட வர்மரை கலங்கடித்தது...
தங்களுக்காக உயிர் நீத்த நண்பனை நினைத்து அவரது மனம் விம்மியது கட்டியணைத்து கதறி அழுதார்..
போர் முடிவுக்கு வந்தது மார்த்தாண்ட வர்மர் பத்மநாபபுரம் சமஸ்தானத்தின் மன்னராக அரியணை ஏறினார்...
போரில் இறந்த சிங்கம்பட்டி ராஜாவின் மகனுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறோம் ...
என்று நினைத்த பொழுதில் ராணி உமையம்மையார் இதற்க்கு ஒரு தீர்வு கண்டார் போரில் இறந்த சிங்கம்பட்டி ராஜாவின் மகனுக்கு இறப்புக்கு பின் சிறப்பு என்று வெகுமதியாக நல்லகுத்தி என்று பெயர் என்று சூட்டினார் ..
அது நாளைடைவில் நல்லக்குட்டி என்று மாறியது அன்று முதல் சிங்கம்பட்டி ராஜாவின் பரம்பரையினர்
தென்னாட்டு புலி நல்லக்குட்டி என்று அழைக்கப்பட்டனர்....