புதன், 29 ஆகஸ்ட், 2018

பூலித்தேவன்

வெல்லற்கரிய திறம் படைத்த வல்லவனாம் வீரன் பூலித்தேவன் சிங்கம்பட்டி பட்டத்திற்கு இளவரசனாக இருந்தார்...

அவர் சிறுவனாக இருந்த பொழுது அவரது மூத்த சகோதரியின் கணவர் அதாவது மைத்துனர் அரசு பொறுப்பேற்று ஆட்சி நிர்வாகம் நடத்தி வந்தார்...

அவர் பேராசை கொண்டு மைனர் பூலித்தேவனை தந்திரமாக அதே நேரத்தில் இரகசியமாக கொல்ல திட்டம் தீட்டினார்...

மைத்துனனையும் ஒழித்து கட்டி ஆட்சியையும் கைப்பற்ற எத்தளித்தார்.. இந்த கெட்ட எண்ணத்தை அறிந்த பூலித்தேவன் அங்கிருந்து நெற்கட்டான் செவல் போய் சேர்ந்தார் அங்கு இருந்த பங்கியர் {சக்கிலியர்} சமூகம் சிறுவனான பூலித்தேவனுக்கு சகல ஆதரவுகளும் நல்கி பாதுகாத்து வந்தார்கள்...

நெற்கட்டான் செவல் பாளையத்தின் ஆட்சியை கைப்பற்ற நடந்த போரிலும் பூலித்தேவனுக்காக கடுஞ்சமர் புரிந்தனர்..

அவருக்காக தனது உயிரையே தைரியமாக பலி கொடுத்தனர் என்றும் இன்றும் பல கதைகள் கூறுகின்றன..

பூலித்தேவனுடன் உடன் வந்த அநேக குடும்பங்கள் கம்பம் பள்ளத்தாக்கில் குடியேறி வாழ்ந்து இருப்பதை இன்றும் காணலாம்..

ஒரு காலத்தில் மதுரை நாயக்கர் மன்னர் ஆட்சியில் அவர் வேண்டுகோளுக்கிணங்க அரசவையின் அந்தப்புரத்தில் வைத்து அரண்மனை கொடும்புலியை விரல்களே மடக்கி வெறுங்கரத்தினால் குத்தி கொன்றார் இந்த அஞ்சா நெஞ்சனின் வீரத்தை பாராட்டிய நாயக்க மன்னர் மதுரை மாநகரின் பரந்த நிலமான செழிப்பு மிக்க "காக்கா" தோப்பை பரிசாக வழங்கினார் இன்று அது விலைமதிக்க முடியாத சொத்து ஆனால் நாளடைவில் அதன் நிர்வாகம் பாளையக்காரர்களிடம் இருந்து விலகி சென்று விட்டது